Connect with us

இலங்கை

காற்றாலைக்கு எதிராக மன்னாரில் 26 வது நாளாக தொடரும் போராட்டம்

Published

on

Loading

காற்றாலைக்கு எதிராக மன்னாரில் 26 வது நாளாக தொடரும் போராட்டம்

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வியாழன் (28) 26 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விடத்தல் தீவு மாதர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆதரவை வழங்கியுள்ளனர்.

 மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகின்ற போராட்டம் இன்றைய தினம் (28)வியாழன் 26 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் விடத்தல் தீவு மாதர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

Advertisement

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன