Connect with us

தொழில்நுட்பம்

கூகுள் டிரான்ஸ்லேட் மட்டுமல்ல: ஏ.ஐ உதவியுடன் மொழிப் பயிற்சி; 70+ மொழிகளில் பேசலாம்!

Published

on

google translate

Loading

கூகுள் டிரான்ஸ்லேட் மட்டுமல்ல: ஏ.ஐ உதவியுடன் மொழிப் பயிற்சி; 70+ மொழிகளில் பேசலாம்!

கூகுள் நிறுவனம் தனது மொழிபெயர்ப்பு செயலியான கூகுள் டிரான்ஸ்லேட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) மேம்பாடுகளைச் செய்துள்ளது. இதன்மூலம், இந்த ஆஃப் இப்போது மொழிக் கற்றல் வழிகாட்டியாகவும், நிகழ்நேர உரையாடல் மொழிபெயர்ப்புச் செயலியாகவும் மாறியுள்ளது.டூயோலிங்கோ (Duolingo) போன்ற பிரபலமான மொழிக் கற்றல் செயலிகளுக்கு போட்டியாக, கூகுள் டிரான்ஸ்லேட்டில் செயற்கை நுண்ணறிவு மொழிக் கற்றல் கருவி சேர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியைப் பயன்படுத்த, பயனர்கள் செயலியில் உள்ள ‘பயிற்சி’ (Practice) பொத்தானை அழுத்த வேண்டும். பின்னர், அடிப்படை (Basic), இடைநிலை (Intermediate), அல்லது மேம்பட்ட (Advanced) ஆகிய திறமைகளில் தங்களுக்கு ஏற்ற ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.மேலும், பயனர்கள் தங்கள் மொழிக் கற்றலுக்கான இலக்குகளை (பயணம், வேலை அல்லது தனிப்பட்ட ஆர்வம்) குறிப்பிடலாம். இந்த குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு தனிப்பயனாக்கப்பட்ட திட்டத்தை உருவாக்கி, கேட்பது மற்றும் பேசுவதற்கான பயிற்சிகளை வழங்கும்.தற்போது, இந்தச் செயற்கை நுண்ணறிவு வழிகாட்டி ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கான பீட்டா சோதனையில் உள்ளது. ஆங்கிலம் பேசுபவர்கள் ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு மொழிகளைப் பயிற்சி செய்யலாம். அதேபோல், ஸ்பானிஷ், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ் பேசுபவர்கள் ஆங்கிலத்தைப் பயிற்சி செய்யலாம்.70+ மொழிகளில் நேரடி மொழிபெயர்ப்புமொழிக் கற்றல் கருவியுடன், கூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் நேரடி மொழிபெயர்ப்பு (Live Translation) அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம், இருவர் வெவ்வேறு மொழிகளில் பேசும்போது, அவர்களின் உரையாடலை உடனடி ஒலி மற்றும் எழுத்து வடிவமாக மாற்றுகிறது.பிக்சல் 10-ல் உள்ள நேரடி மொழிபெயர்ப்பைப் போலல்லாமல், இந்த செயலி பயனரின் குரல் அல்லது தொனியை நகலெடுக்காமல், உரையாடலின் தெளிவு மற்றும் இயல்பான ஓட்டத்தில் கவனம் செலுத்துகிறது. மேலும், விமான நிலையங்கள் அல்லது சந்தைகள் போன்ற சத்தமுள்ள இடங்களில் உரையாடல்களை எளிதாக்க, இது சத்தத்தைக் குறைக்கும் தொழில்நுட்பத்தையும் (noise isolation) பயன்படுத்துகிறது.நேரடி மொழிபெயர்ப்பு தற்போது இந்தி, அரபு, ஸ்பானிஷ், தமிழ், கொரியன் மற்றும் பிரெஞ்சு உட்பட 70-க்கும் மேற்பட்ட மொழிகளை ஆதரிக்கிறது. இந்த அம்சம் அமெரிக்கா, இந்தியா மற்றும் மெக்சிகோவில் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கிறது. இந்த மேம்பாடுகளுடன், கூகுள் டிரான்ஸ்லேட் ஒரு சாதாரண மொழிபெயர்ப்புச் செயலியிலிருந்து, மொழிக் கற்றல் மற்றும் நிகழ்நேரத் தொடர்புகளுக்கான வலுவான தளமாக உருவாகியுள்ளது. இது பாரம்பரிய கற்றல் செயலிகளுக்கு ஒரு சிறந்த மாற்று வழியாக அமையும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன