Connect with us

பொழுதுபோக்கு

கேப்டனுக்கு ஜோடியாக 4 படங்கள்; ரஜினி – கமலுடன் ஹிட் கொடுத் நடிகை: இவரை யார்னு தெரியுதா?

Published

on

Actress rubini

Loading

கேப்டனுக்கு ஜோடியாக 4 படங்கள்; ரஜினி – கமலுடன் ஹிட் கொடுத் நடிகை: இவரை யார்னு தெரியுதா?

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில், அறிமுகமாகி, அவருக்கு ஜோடியாக 4 படங்களில் நடித்த நடிகை இன்று சினிமாவை விட்டு விலகி இருக்கிறார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். அதேபோல் அவர் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.தமிழ் சினிமாவில் 1987-ம் ஆண்டு வெளியான கூலிக்காரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரூபினி. இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார். ரஜினிகாந்த் பிரபு, கமல்ஹாசன், ராமராஜன், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள நடிகை ரூபினி விஜயகாந்துடன் இணைந்து 4 படங்களில் நடித்துள்ளார்.சினிமா பின்புலம இல்லாமல் சினிமாவில் சாதித்த முன்னணி நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பவர் தான் கேப்டன் விஜயகாந்த். பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்த இவர், தனது 100-வது படம்தை பெரிய வெற்றிப்படமாக கொடுத்து சினிமா வட்டாரத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருந்தார். ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், கடந்த 1991-ம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் தான் விஜயகாந்தின் 100-வது திரைப்படம்.சரத்குமார், மன்சூர் அலிகான், ரூபனி, காந்திமதி, நம்பியார், ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். தற்போது படம் வெளியாகி 34 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 25 விஜயகாந்த் பிறந்த நாளை முன்னி்ட்டு கேப்டன் பிரபாகரன் திரைப்படம் (ஆகஸ்ட் 22) இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தை அவரது ரசிகர்கள் புதுப்படம் ரிலீஸ் ஆனது போன்று ரசித்து பார்க்கின்றனர்.இந்த படத்தில் நடித்த மன்சூர் அலிகான், சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட நடிகர்கள் தற்போதும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். ஆனால் படத்தில் விஜயகாந்த் மனைவியாக நடித்த ரூபினி இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது. மும்பையை சேர்ந்த ரூபினி விஜயகாந்த் நடித்த கூலிக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன்பிறகு ரஜினியுடன் மனிதன்,  ராஜா சின்ன ரோஜா ஆகிய படங்களில் நடித்திருந்தார். கமல்ஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர், 7 ஆண்டுகளில், 30-க்கு மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தார். கடைசியாக, கடைசியாக 1994-ம் ஆண்டு தாமரை என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார்.அதன்பிறகு நடிக்காத இவர், 2020-ம் ஆண்டு 26 வருட இடைவெளிக்கு பிறக சித்தி 2 சீரியலில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தனது வசீகர புன்னகையால் பலரின் இதயங்களை கவர்ந்த நடிகை ரூபினி இப்போது மும்பையில் வசித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் அவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோ பதிவுகள் வைரலாகி வருகிறது.  விஜயகாந்த் நடித்த கூலிக்காரன் படத்தில் அறிமுகமான இவர், அடுத்து புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், உள்ளிட்ட 4 படங்களில் இணைந்து நடித்துள்ளார், இதில் புலன் விசாரணை தவிர மற்ற 3 படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன