இந்தியா
டிஜிட்டல் அரஸ்ட் என்று கூறி 9 லட்சம் மோசடி: ஆந்திரா வாலிபரை மடக்கி பிடித்த புதுச்சேரி போலீஸ்!
டிஜிட்டல் அரஸ்ட் என்று கூறி 9 லட்சம் மோசடி: ஆந்திரா வாலிபரை மடக்கி பிடித்த புதுச்சேரி போலீஸ்!
உங்களை டிஜிட்டல் அரஸ்ட்செய்து உள்ளேன் என்று கூறி, 9 லட்சத்தை அபகரித்த ஆந்திராவைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்புதுவை சேர்ந்த ஒரு நபரை கடந்த ஜனவரி மாதம், தொடர்பு கொண்ட இணைய வழி மோசடிக்காரர்கள் உங்களுடைய ஆதார்கார்டு, செல்போன் எண்கள் ஆகியவற்றை பயன்படுத்தி தைவான் நாட்டிற்கு போதை மருந்துகள் கடத்தப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் தான் பொறுப்பு என்றும், உங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளோம், தங்களை வீட்டை விட்டு எங்கே செல்லக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.மேலும், உன்னுடைய வங்கிக் கணக்கில் இருக்கின்ற பணத்தை அனைத்தையும் நான் சொல்கின்ற வங்கி கணக்கு மாற்றுங்கள் அப்படி இல்லையென்றால் உங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்து விடுவேன் என மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன இந்த நபர், 9 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் பணத்தை மேற்படி இணைய வழி மோசடிக்காரர்கள் சொன்ன வங்கி கணக்கு அனுப்பியுள்ளார். இது சம்மந்தமாக மேற்படி புகாரதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குற்ற வழக்கு 31/2025 u/s 318 (4), 319 (2), 336 (3), 111 BNS & 66 ‘D’ of IT Act, 2000 விசாரனை செய்யப்பட்டதுஇது சம்பந்தமாக இணைய வழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன் சைபர் கிரைம் மூலம் விசாரனை செய்தனர் முதுநிலை காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுபடி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையில், தலைமைக் காவலர் அருண்குமார், காவலர்கள் பாலாஜி, வைத்தியநாதன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர்களை கொண்ட தனிப்படை போலிசார்கள் விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரனையில், புகார்தாரர் செலுத்திய பணம் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பொந்து சங்கரா ராவை என்பவரின் வங்கி கணக்கில் வரவைக்கப்பட்டு, அந்த பணம் பேங்க் செக் மூலம் பெறப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து, இணையவழி மோசடிக்காரர்கள் தெலுங்கானாவில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தகவல் கிடைத்து. விசாகபட்டினத்தை சேர்ந்த பொந்து சங்கரா ராவை சைபர் கிரைம் போலிசார் கைது செய்து அவரிடமிருந்து 9.5 லட்சம் பணம், செல்போன் மற்றும் பேங்க் செக்புக் ஆகியன பறிமுதல் செய்தது.அதன்பின்னர், மேற்படி நபர் இன்று தலைமை குற்றவியல் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இது பற்றி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன் கூறுகையில், நீங்கள் அனுப்பிய பார்சலில் அல்லது உங்களுக்கு வந்த பார்சலில் போதை பொருள் அல்லது ஆயுதம் அல்லது சட்டதிர்க்கு புறம்பான பொருட்கள் வந்துள்ளதாக உங்களை சி.பி.ஐ, இ.டி மற்ற மாநில காவல் துறையிலிருந்து பேசுவதாக கூறி தங்களை மிரட்டி டிஜிட்டல் அரெஸ்ட் பண்ணிவிட்டோம் என்று கூறி சைபர் குற்றவாளிகள் பணம் பறிக்க முயல்வார்கள்.பொது மக்கள் யாரும் இதனை நம்பவேண்டாம். டிஜிட்டல் அரஸ்ட் என்பது இந்திய சட்டதிலே கிடையாது. அப்படி யாரேனும் கூறினால் அதனை நம்பாதீர்கள். பிடெக்ஸ் கொரியர், ட்ராய், மும்பை போலீஸ்-ல் இருந்து பேசுவதாக கூறி உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என்று கூறினால் அவர்களது தொடர்பை உடனடியாக துண்டித்து விடுங்கள். உங்களுடைய சிம்கார்டு ஆதார்கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கி அதில் ஹவாலா பணம் பரிமாற்றம் நடைபெற்று உள்ளது என்றும் அந்த பணம் தீவீரவாத செயலுக்கு பயன்படுத்த பட்டுள்ளது என்றும் உங்கள் சிம்கார்டு தவறான செயலுக்கு பயன்படுத்தபட்டு உள்ளது என்றும் சைபர் குற்றவாளிகள் தொடர்பு கொண்டு உங்களை மிரட்டினால் யாரும் நம்பாதீர்கள்.சமூக வளதளங்களில் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் உங்களிடம் பணம் தருவதாக கூறி வங்கி கணக்குகள் மற்றும் சிம் கார்டு கேட்டால் அதனை கொடுக்காதீர்கள், அப்படி கொடுத்து தவறான செயலில் உங்கள் வங்கி கணக்கு மற்றும் சிம்கார்டு ஈடுபட்டால் காவல் துறையினரால் கைது செய்ய நேரிடும். மேலும் இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்கவும் அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழி காவல் நிலையத்தில் இலவச தொலைபேசி எண்: 1930 மற்றும் 0413-2276144/9489205246 மற்றும் மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் புகார் அளிக்க www.cybercrime.gov.in செய்யலாம் என்று கூறியுள்ளர்.பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
