உலகம்
மனிதர்களின் சதையை உண்ணும் ஒட்டுண்ணிகள்; அமெரிக்காவில் கண்டறிவு!
மனிதர்களின் சதையை உண்ணும் ஒட்டுண்ணிகள்; அமெரிக்காவில் கண்டறிவு!
அமெரிக்காவில் மனிதர்களின் சதையை உண்ணும் ‘ஸ்க்ரூவோர்ம்’ என்ற ஒட்டுண்ணி ஒருவருக்குத் தொற்றியுள்ளதை அமெரிக்கா சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மத்திய நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், நியூயோர்க்கில் உள்ள ஒருவரிடம், இந்த ஒட்டுண்ணியைக் கண்டறிந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர், எல் சால்வடாரில் இருந்து திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த, 1960களில் உள்நாட்டில் ஒழிக்கப்பட்ட இந்த ஒட்டுண்ணி, தற்போது மத்திய அமெரிக்காவிலிருந்து வடக்கே நகர்ந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
