தொழில்நுட்பம்
5 – 15 வயது குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் இனி கட்டாயம்! யு.ஐ.டி.ஏ.ஐ. அறிவுறுத்தல்
5 – 15 வயது குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் இனி கட்டாயம்! யு.ஐ.டி.ஏ.ஐ. அறிவுறுத்தல்
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகஸ்ட் 27 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி, UIDAI தலைவர் புவனேஷ்குமார், நிலுவையில் உள்ள பயோமெட்ரிக் புதுப்பித்தல்களை முடிக்க மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். பள்ளிகளில் முகாம்கள் அமைத்து இந்தப் பணியை விரைந்து முடிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.இந்த முயற்சிக்கு உதவும் வகையில், UIDAI, பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையுடன் இணைந்துள்ளது. இதன் மூலம் பள்ளி குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் நிலை, ‘யுனைடெட் டிஸ்ட்ரிக்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் ஃபார் எஜுகேஷன் பிளஸ்’ (UDISE+) பயன்பாட்டில் நேரடியாகக் கிடைக்கும். இது கோடிக்கணக்கான மாணவர்களின் பயோமெட்ரிக் புதுப்பித்தலை எளிதாக்கும்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்ககுழந்தைகளுக்கு 5 வயதிலும், பிறகு 15 வயதிலும் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிப்பது அவசியம். இது ஆதார் பயோமெட்ரிக் தரவுகளின் துல்லியத்தையும் நம்பகத்தன்மையையும் பராமரிக்க உதவுகிறது. தற்போது, சுமார் 17 கோடி ஆதார் எண்களுக்குப் பயோமெட்ரிக் புதுப்பித்தல் நிலுவையில் உள்ளது.ஏன் பயோமெட்ரிக் புதுப்பித்தல் அவசியம்?குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்படாவிட்டால், அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் சலுகைகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். மேலும், நீட் (NEET), ஜேஇஇ (JEE), கியூஇடி (CUET) போன்ற போட்டித் தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகளுக்குப் பதிவு செய்வதிலும் சிரமங்கள் ஏற்படலாம்.”பல சமயங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடைசி நேரத்தில் ஆதார் அப்டேட்களுக்காக அவசரப்படுவதைக் காண முடிகிறது. இது தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்துகிறது. சரியான நேரத்தில் பயோமெட்ரிக் புதுப்பித்தலைச் செய்வதன் மூலம் இதைத் தவிர்க்கலாம்” என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.UIDAI தலைமை நிர்வாக அதிகாரி கடிதம்UIDAI தலைமை நிர்வாக அதிகாரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்தத் திட்டத்தைப் பற்றி விவரித்து, பள்ளிகள் மூலம் முகாம்களை நடத்த ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.”பள்ளிகள் வழியாக முகாம் அணுகுமுறை, நிலுவையில் உள்ள பயோமெட்ரிக் அப்டேட்களை முடிக்க உதவும் என்று கருதப்பட்டது. எந்தெந்த மாணவர்கள் பயோமெட்ரிக் புதுப்பித்தலைச் செய்யவில்லை என்பதை பள்ளிகள் எப்படி அறிந்துகொள்வது என்பதே முக்கியக் கேள்வியாக இருந்தது. இதற்கு UIDAI மற்றும் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை இணைந்து UDISE+ செயலி மூலம் ஒரு தீர்வை உருவாக்கியுள்ளது. இப்போது அனைத்துப் பள்ளிகளாலும் நிலுவையில் உள்ள பயோமெட்ரிக் புதுப்பித்தல்களைக் கண்டறிய முடியும்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.UDISE+ என்பது பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் கீழ் இயங்கும் ஒரு கல்வி மேலாண்மை தகவல் அமைப்பாகும். இது பள்ளி கல்வி தொடர்பான பல்வேறு புள்ளிவிவரங்களைப் பதிவு செய்கிறது. UIDAI மற்றும் பள்ளி கல்வித் துறையின் இந்த கூட்டு முயற்சி, குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிப்பதை எளிதாக்கும் என்று அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
