Connect with us

பொழுதுபோக்கு

கண்ணதாசன் இறுதிச்சடங்கு; மொத்த செலவையும் ஏற்ற எம்.ஜி.ஆர்: அப்போது எவ்வளவு தெரியுமா?

Published

on

Kannadasan MGR

Loading

கண்ணதாசன் இறுதிச்சடங்கு; மொத்த செலவையும் ஏற்ற எம்.ஜி.ஆர்: அப்போது எவ்வளவு தெரியுமா?

சினிமா உலகில் எம்.ஜி.ஆர் கண்ணதாசன் இடையே மோதல், நட்பு என கலந்து இருந்தாலும், அவர் மரணமடைந்த பின்னர் அவரது இறுதிச்சடங்குக்கான மொத்த செலவையும் எம்.ஜி.ஆர் தனது அ.தி.மு.க கட்சி நிதியில் இருந்து கொடுத்ததாக பழம்பெரும் நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து பதவியில் இருந்தவர் தான் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமான எம்.ஜி.ஆர், அரசியலிலும் முக்கிய சக்தியாக இருந்தார். ஒரு கட்டத்தில்,தி.மு.கவில் இருந்த எம்.ஜி.ஆர், அண்ணாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.அதேபோல் சினிமாவில் தனக்கு நெருங்கிய நண்பராக இருந்து ஒரு கட்டத்தில் மோதல் ஏற்பட்டு பிரிந்த கண்ணதாசன், தன்னை கடுமையாக விமர்சித்து பல அறிக்கைகயை வெளியிட்டிருந்தாலும், அவரை அரசவை கவிஞராக பணியமர்த்தி அழகு பார்த்தவர் தான் எம்.ஜி.ஆர். எந்த விமர்சனங்கள் இருந்தாலும், அதில் இருந்து மாறாத எம்.ஜி.ஆர் கண்ணதாசன் அந்த பதவியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். தான் இறக்கும் வரை கண்ணதாசன் இந்த பதவியில் இருந்தார்.ஒரு கட்டத்தில் கண்ணதாசன், அரசவை கவிஞராக இருந்து அமெரிக்காமல் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது பதவி, கவிஞர் புலமை பித்தனுக்கு வழங்கப்பட்டது. அமெரிக்கா சென்ற கண்ணதாசன் அங்கேயே மரணமடைந்த நிலையில், அவரது உடலை நடிகர் சங்கத்தில் வைக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பியுள்ளார். இதற்காக அவரது குடும்பத்தினரிடம் பேசிய அவர், அப்போது நடிகர் சங்க செயலாளராக இருந்த மேஜர் சுந்தர்ராஜனிடம் போன் செய்து, கவிஞர் வீட்டில் பேசிவிடடேன். அவரது உடலை நடிகர் சங்கத்தில் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இதனையடுத்து கவிஞர் கண்ணதாசனின் உடல் நடிகர் சங்கத்தில் வைக்கப்பட்ட நிலையில், மறுநாள் இறுதி ஊர்வலத்திற்கு எம்.ஜி.ஆர் வருவரா என்ற சந்தேகம் இருந்தாலும் சரியான நேரத்தில் அவர் வந்துள்ளார். சிவாஜி கணேசன் தனக்கு உடல் நிலை சரியில்லை தன்னால் வர முடியாது என்று சொன்னாலும், அவரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளனர். கண்ணதாசன் இறுதி ஊர்வலத்தின்போது வண்டியை பார்த்த எம்.ஜி.ஆர், என்ன இப்படி அலங்காரம் செய்திருக்கீங்க, எங்கிருந்து பார்த்தாலும் கண்ணதாசன் முகம் தெரிய வேண்டும்.A post shared by மாண்புமிகு மக்கள் (@tamilpeople_offl)வண்டியில் இருக்கும் அலங்காரத்தை கலையுங்கள் என்று சொல்லிவிட்டு மீண்டும் அலங்காரம் செய்து அதன்பிறகு கண்ணதாசன் உடலை வைத்து எடுத்து சென்றுள்ளனர். இந்த செலவுகளை கவனிக்க நடிகர் சங்கத்தில் பணம் இல்லை. இதை எப்படி சரிக்கட்ட முடியும்? நாளைக்கு எல்லோரும் கேள்வி கேட்பார்களே என்று எம்.ஜி.ஆரிடம் மேஜர் சுந்தர்ராஜன் சொல்ல, அதற்கு அவர் எவ்வளவு செலவு என்று சொலுங்கள் என்று கூறியுள்ளார். மொத்தம் ரூ5000 என்று சொல்ல, அந்த பணத்தை அ.தி.மு.க சார்பில் ஒரே செக்காக நடிகர் சங்கத்திற்கு கொடுத்துள்ளார் எம்.ஜி.ஆர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன