பொழுதுபோக்கு
கருவை கலைக்க சொன்ன மாதம்பட்டி ரங்கராஜ்? ஜாய் கிறிசில்டா திடுக்கிடும் பதில்கள்
கருவை கலைக்க சொன்ன மாதம்பட்டி ரங்கராஜ்? ஜாய் கிறிசில்டா திடுக்கிடும் பதில்கள்
கோவையைச் சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ், ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் ‘கேசினோ’, ‘மிஸ் மேகி’, ‘பென்குயின்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். மேலும், தமிழ்நாட்டின் முக்கிய பிரபலங்களின் வீடுகளில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் அவர் கேட்டரராக செயல்படுகிறார்.மாதம்பட்டி ரங்கராஜ், அவரது மாமன் மகள் ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டு, இரு குழந்தைகளுடன் குடும்பம் நடத்தி வருகிறார். ஆனால், கடந்த சில மாதங்களாக அவர் மனைவியை பிரியவுள்ளதாகவும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுடன் காதல் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, 2018ல் இயக்குநர் ஜே.ஜே. பெட்ரியை திருமணம் செய்து, 2023ல் அவரிடமிருந்து பிரிந்ததை அறிவித்திருந்தார். சமீபத்தில், மாதம்பட்டி ரங்கராஜுடன் திருமணம் நடந்ததாக கூறி புகைப்படங்களும், இருவரும் முத்தம் கொள்கிற வீடியோவையும் வெளியிட்டார். அதில், தாம் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாகவும், அந்த வீடியோவை ரங்கராஜ் தான் எடிட் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.மருத்துவ பரிசோதனைக்காக சென்ற நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்ட ஜாய், குழந்தைக்கு “ராஹா” என்ற பெயரையும் வைத்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, ரங்கராஜ் முதல் மனைவியுடன் விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் எப்படி சாத்தியம் என்பதுபற்றி கேள்விகள் எழுந்தன. ரங்கராஜ், ஜாய் வெளியிட்ட எந்த புகைப்படங்களையும் எதிர்க்கவில்லை. ஆனால் சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த ஜாயுடன் கூடிய அனைத்து புகைப்படங்களையும் அவர் நீக்கியுள்ளார்.இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டார் என்றும், தன்னைக் கர்ப்பமாக்கிவிட்டுத் தன்னுடன் வாழ மறுப்பதாகவும் கூறி ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.ஜாய் கிரிஸில்டா தனது புகாரில், “நாங்கள் சில ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்தோம். பின்னர் எம்.ஆர்.சி. நகர் அம்மன் கோயிலில் திருமணம் செய்துகொண்டோம், ஆனால் அதை பதிவு செய்யவில்லை. நாங்கள் திருமணமும், கர்ப்பமும் குறித்து வெளியே தெரிவித்த பிறகு, மாதம்பட்டி ரங்கராஜ் என்னை சந்தித்து, கருவை கலைக்க சொல்லி தாக்கியும், தவறாகவும் நடந்தார்” எனக் கூறினார். இதனையடுத்து, போலீசார் ரங்கராஜிடம் விசாரணை நடத்துவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், இதுவரை மவுனமாக இருந்த அவர், தற்போது குறித்த விவகாரம் குறித்து பதிலளிப்பாரா என்பதையும் பலர் எதிர்நோக்கி உள்ளனர்.
