இலங்கை
கைவிடப்பட்ட அரச பேருந்துகளின் பணிப்புறக்கணிப்பு!
கைவிடப்பட்ட அரச பேருந்துகளின் பணிப்புறக்கணிப்பு!
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் பின் அரச பேருந்துகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.
யாழ்ப்பாணம் அரச பேருந்துகள் நேற்று முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பு இன்று காலை 10 மணியளவில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது
தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் யாழ். அரச பேருந்துசாலை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதுக்கிணங்க இன்று அரச பேருந்து சேவைகள் யாவும் வழமை போல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
