இலங்கை
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி சான்றுப்பொருள்களை மக்கள் அடையாளம் காண நடவடிக்கை
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி சான்றுப்பொருள்களை மக்கள் அடையாளம் காண நடவடிக்கை
நீதிமன்றத்தில் தெரிவிப்பு!
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சான்றுப்பொருள்களை பொதுமக்கள் அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போதே, புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சான்றுப்பொருள்களை பொதுமக்கள் அடையாளம் காணும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன என்றும். அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கு காலஅவகாசம் தேவை என்றும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதி. வழக்கை நவம்பர் மாதம் 6ஆம் திகதிக்குத் தவணையிட்டார்.
