பொழுதுபோக்கு
டியூனை மாத்துங்க, நீங்க என்னை ஏமாத்துறீங்க; தேவா ஹிட் பாடலை சந்தேகப்பட்ட இயக்குனர்; எந்த பாட்டு தெரியுமா?
டியூனை மாத்துங்க, நீங்க என்னை ஏமாத்துறீங்க; தேவா ஹிட் பாடலை சந்தேகப்பட்ட இயக்குனர்; எந்த பாட்டு தெரியுமா?
திரையுலகில் கானா தேவை, தேனிசை தென்றல் தேவா என பல பெயர்களை வாங்கிய தேவாவின் பாட்டையே ஒரு இயக்குநர் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அந்த சுவாரசியமான தகவல்கள் பற்றி பார்ப்போம். இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் இசையமைப்பாளர் தேவா ஆகியோரின் கூட்டணியில் பல வெற்றிகரமான திரைப்படங்கள் உருவாகியுள்ளன. இவர்களின் தொழில்முறை உறவுக்கு அப்பால், தனிப்பட்ட முறையில் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டதற்கான ஒரு சுவாரஸ்யமான சம்பவம், ஒரு உரையாடலில் வெளிப்படுத்தப்பட்டது.பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பிரபல இசையமைப்பாளர் தேவா ஆகியோருக்கு இடையே நடந்த சுவாரஸ்யமான உரையாடல் ஒன்று ப்ளாக்ஷீப் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் இசையமைப்பாளர் தேவா இருவரும் தமிழ் திரையுலகில் முக்கியமான பங்களிப்பை செய்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சில படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார்.பாடல் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நட்புக்காக’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மீசைக்கார நண்பா’ என்ற பாடலுக்கு இசையமைத்தபோது நடந்த சில சுவாரசியமான சம்பவங்களை பற்றி மேடையில் இருவரும் பகிர்ந்துக்கொண்டனர். இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.மீசக்காரன் நண்பா என்ற பாடலை இசையமைத்தபோது நடந்த ஒரு நிகழ்வு பற்றி தேவா குறிப்பிட்டார். இந்தப் பாடலின் டியூனை ஒரு கம்போஸ் செய்து முடித்த பிறகு, மறுநாள் ஹோட்டலில் பாடலின் டியூனை மாற்றும்படி ரவிக்குமார் தேவாவைக் கேட்டுக்கொண்டார். ஏன் பாடலின் டியூனை மாற்றச் சொன்னார் என்று தேவா கேட்டபோது, அதற்கு ரவிக்குமார், ‘இல்லை இல்லை, நீங்கள் என்னை ஏமாற்றியது போல் தெரிந்தது. உங்கள் முகத்தை அப்படியே விஜயகுமார் சரத்குமார் மாதிரி மாற்றி நடித்துக் காட்டிவிட்டீர்கள். அதனால் நான் ஏமாந்துவிட்டேனோ என்று தெரியவில்லை’ என்று கூறியதாக தேவா கூறினார்.அதுமட்டுமின்றி இசையமைப்பின் போது தேவா, இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் முகபாவனைகளைப் பார்க்காமல் இருப்பாராம். இவர்களின் வெற்றி கூட்டணியில் நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, படையப்பா போன்ற படங்களில் உள்ள பாடல்கள் வெற்றிப் பெற்றன. அதுமட்டின்றி உன்னிடம் என்னை கொடுத்தேன் படத்தில் தேவா இசையமைத்த “எதோ ஒரு பாட்டு”, “மறந்திடாதே” போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை.
