Connect with us

பொழுதுபோக்கு

தப்பு நடந்தா அடிப்பேன், உங்களை மாதிரி தான்; எம்.ஜி.ஆரிடம் தைரியமாக சொன்ன ஃபைட் மாஸ்டர்: கேப்டனின் நெருங்கிய நண்பர்!

Published

on

mgr vijayakanth

Loading

தப்பு நடந்தா அடிப்பேன், உங்களை மாதிரி தான்; எம்.ஜி.ஆரிடம் தைரியமாக சொன்ன ஃபைட் மாஸ்டர்: கேப்டனின் நெருங்கிய நண்பர்!

ஜாகுவார் தங்கம் ஒரு இந்தியத் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் 987-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். இந்நிலையில்தான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்பதற்கு சில சான்றுகளையும் வானம் தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.  ஜாகுவார் தங்கம் 6 வயதில் சிலம்பம் கற்கத் தொடங்கினார், மேலும் 27 வகையான தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர். தமிழக அரசின் சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான விருதை ஐந்து முறை பெற்றுள்ளார். சினிமாவுக்குள் வர எம்.ஜி.ஆர் தான் அவருக்கு உதவினார் என்று அவரே ஒருமுறை கூறியுள்ளார்.ஜாகுவார் தங்கம் தான் ஒரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர் என்று கூறி, எம்.ஜி.ஆரின் சண்டை காட்சிகள், உடல்வாகு மற்றும் அவர் பெரியவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றை விரும்புவதாகத் தெரிவித்தார். மேலும், புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களை விட்டுவிட வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் அறிவுரைகளையும் அவர் பாராட்டினார்.எம்.ஜி.ஆரை முதன்முதலாகச் சந்தித்தபோது தான் மிகவும் பதற்றமாக உணர்ந்ததாகவும், ஆனால் எம்.ஜி.ஆர் அவரை அணைத்து, முதுகில் தட்டிக்கொடுத்து அமைதிப்படுத்தியதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். இந்தச் சந்திப்பின்போது, எவ்வளவு வருடங்களாக சண்டைப்பயிற்சி செய்கிறீர்கள் என்று எம்.ஜி.ஆர் கேட்டார், அதற்கு தங்கம் 18 வருடங்கள் என்று பதிலளித்தார். தான் என்ன வேலை செய்கிறேன் என்று எம்.ஜி.ஆர் கேட்டபோது, தவறு செய்பவர்களை அடிப்பேன் என்று தங்கம் கூறியிருக்கிறார். அதற்கு எம்.ஜி.ஆர், “அது சினிமா” என்று சிரித்தபடி கூற, தான் அதை ஒரு உண்மையான வேலையாக நினைத்ததாக தங்கம் கூறினார்.மறுநாள் காலை எம்.ஜி.ஆர் தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும், ஆனால் அங்கு நிறைய போலீசார் இருந்ததால் பயந்து ஒதுங்கி நின்றதாகவும் ஜாகுவார் தங்கம் கூறினார். அதற்குக் காரணம், தான் தவறு செய்பவர்களை அடிப்பதால் தன்மீது பல வழக்குகள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். எம்.ஜி.ஆரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் அவரை பார்த்து பார்த்து ரசித்ததாகவும் அவர் கூறினார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன