பொழுதுபோக்கு
மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார்… ஜாக் கிரிசில்டா பரபர புகார்
மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார்… ஜாக் கிரிசில்டா பரபர புகார்
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜாக் கிரிசில்டா சென்னை போலீஸ் ஆணையரகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். நடிகரும், சமையல் கலை வல்லுநருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றிவிட்டதாகவும், கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்ட அவர் தன்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார் என்றும் தனது புகாரில் ஜாக் கிரிசில்டா கூறியுள்ளார். முதல் மனைவியுடன் மாதம்பட்டி ரங்கராஜ் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிலையில், அது பற்றி மாதம்பட்டி ரங்கராஜிடம் ஜாக் கிரிசில்டா கேட்டபோது அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
