இலங்கை
மின்சாரசபை ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வூதியத் திட்டம்
மின்சாரசபை ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வூதியத் திட்டம்
புதிய மின்சாரச் சட்டத்தின்படி நிறுவனத்தில் சேர விரும்பாத இலங்கை மின்சாரசபையின் ஊழியர்களுக்குத் தன்னர் ஓய்வூதியத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியால் 2025 இலங்கையின் சாரசபையின் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த விதிகளின்படி 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவைக்காலம் கொண்ட ஊழியர்கள் கடந்த சேவைக்காலத்தில் ஒவ்வொரு 12மாதங்களுக்கும் இரண்டு மாத சம்பளத்தையும், மீதமுள்ள சேவைக்காலத்தில் ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் ஒன்றரை மாத சம்பளத்தையும் பெற உரிமைபெறுவார்கள். 10 ஆண்டுகளுக்கும் குறைவான சேவைக்காலம் கொண்ட ஊழியர்கள் கடந்த சேவைக்காலத்தில் ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் 5 மாத சம்பளத்தைப் பெற உரிமை பெறுவார்கள். மீதமுள்ள சேவைக்காலத்துக்கு எந்தக்கட்டணமும் செலுத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
