இலங்கை
ராஜித சேனாரத்ன விளக்கமறியல்!
ராஜித சேனாரத்ன விளக்கமறியல்!
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (29) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவருக்கு எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையையடுத்து, கொழும்பு பிரதான நீதிவான் கடந்த 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது. இதற்கிடையில் ராஜிதவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திருத்தி இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.
