இலங்கை
எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!
எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று அல்லது நாளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளிலும் இந்த விலை திருத்தம் நடைபெறுகிறது.
இது சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட செலவு-பிரதிபலிப்பு விலை நிர்ணயக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது.
அதன்படி, கடந்த இரண்டு மாதங்களாக எரிபொருள் விலைகளில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படதாக நிலையில், இம்முறை விலைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கடந்த மாதத்தில் கணிசமாகக் குறைந்துள்ளன.
