Connect with us

இலங்கை

கண்ணை மறைத்த மூட நம்பிக்கை; மந்திரவாதி கொடுத்த ஐடியா; பேரனை நரபலி கொடுத்த தாத்தா

Published

on

Loading

கண்ணை மறைத்த மூட நம்பிக்கை; மந்திரவாதி கொடுத்த ஐடியா; பேரனை நரபலி கொடுத்த தாத்தா

   தோஷத்தை தீர்ப்பதற்காக 16 வயது சிறுவனை , தாத்தா நரபலி கொடுத்த சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது .

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் காமினி. இவரது மகன் பியூஷ் (17), அங்குள்ள சரஸ்வதி வித்யா மந்திரி பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

Advertisement

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற பியூஷ் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த காமினி, பல இடங்களிலும் தேடியும் கிடைக்காததால் மகனை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

அந்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் பியூஷை தேடியபோது ஒரு ஓடையில் துண்டிக்கப்பட்ட தலை கிடப்பதாக தகவல் வந்தது.

பொலிஸார் அதிர்ச்சியடைந்து சென்று பார்த்தபோதுப் அதே ஓடையின் வெவ்வேறு பகுதிகளில் கிடந்த மற்ற உடல் பாகங்களையும் கைப்பற்றினர்.

Advertisement

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் தாத்தா பேரனை நரபலி கொடுத்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி பிரயாக்ராஜில் உள்ள கரேலியில் பதுங்கியிருந்த சரண்சிங்கை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.

எனது மகன் கடந்த 2023ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு அடுத்தாண்டு எனது மகளும் தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

எனது குடும்பத்துக்கு யாரோ கெடுதல் செய்து இருப்பதால்தான் இவ்வாறு நடந்துவிட்டது என்று சிலர் கூறினர்.

அதனை சரிசெய்ய உள்ளூரில் இருக்கும் மந்திரவாதி ஒருவரை சந்தித்தேன்.

அவர், உனது தம்பியின் பேரனால்தான் உனக்கு இந்த துன்பம் நேர்ந்துள்ளது. அவனை கொன்று விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றார்.

Advertisement

அவரது ஆலோசனைப்படி பியூஷை நரபலி கொடுக்க முடிவு செய்தேன். இதையடுத்து பியூஷை கடத்தி, அவனது தலையை துண்டித்து கொன்றேன். பின்னர் உடல் பாகங்களையும் துண்டு, துண்டாக வெட்டி ஓடையில் வீசினேன் என கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மூட நம்பிக்கையால் சிறுவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன