இலங்கை
பேருந்து விபத்தில் ஒருவர் பலி.. 57 பேர் காயம்
பேருந்து விபத்தில் ஒருவர் பலி.. 57 பேர் காயம்
பொத்துவில் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 57 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கெப்பட்டிபொலவிலிருந்து அறுகம்பைக்கு சுற்றுலா சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
பொத்துவில் கோமாரி பகுதியில் உள்ள பாலம் அருகே பேருந்து சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இறந்தவர் வெலிமடை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
