இலங்கை
வெளிநாட்டு செலவின மோசடி குறித்து முன்னாள் அதிகாரிகள் மீது விசாரணை!
வெளிநாட்டு செலவின மோசடி குறித்து முன்னாள் அதிகாரிகள் மீது விசாரணை!
கடந்த காலங்களில் அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களில் தலைவர்களாகப் பதவி வகித்த சுமார் பத்துப் பேர் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரசாங்கத் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட நியாயாதிக்க சபைகளில் தலைவர்களாகப் பணியாற்றியவர்களின் வெளிநாட்டு பிரயாணங்கள் மற்றும் ஏனைய செலவினங்கள் குறித்து தற்போது தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், கடந்த காலங்களில் வெளிநாட்டுப் பயணங்களுக்கு பாரிய தொகைகளைச் செலவிட்ட முன்னாள் திணைக்கள, கூட்டுத்தாபனத் தலைவர்கள் பத்துப் பேருக்கு எதிரான விசாரணைகள் தற்போதைக்கு நிறைவு பெற்றுள்ளன.
வெகுவிரைவில் அவர்கள் இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தின் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களில் பலரும் நிதிமோசடி மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
