Connect with us

இலங்கை

24 மணிநேர வாகன விபத்துக்கள் – 6 பேர் உயிரிழப்பு!

Published

on

Loading

24 மணிநேர வாகன விபத்துக்கள் – 6 பேர் உயிரிழப்பு!

நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஆறு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

கிளிநொச்சி, மொரவெவ, அநுராதபுரம், வலஸ்முல்ல மற்றும் அரலகங்வில ஆகிய இடங்களில் இந்த வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

பரந்தன் பகுதியில் A-9 வீதியில் பேருந்து ஒன்றுடன் லொறி மோதி விபத்துக்குள்ளான நிலையில், அதே  வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியுள்ளது. 

இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி  மற்றும் அவருடன்  பின்னால் இருந்து பயணித்தவரும் உயிரிழந்தனர். 

மொரவெவ பகுதியில் மோட்டார் சைக்கிளுடன், துவிச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த தம்பலகாமத்தை சேர்ந்த 71 வயதுடையவர் உயிரிழந்தார்.

Advertisement

இ​தேவேளை, அனுராதபுரம், மல்வத்துஓயா இரும்புப் பாலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 

உயிரிழந்தவர் கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன் வலஸ்முல்ல-ஹக்மன வீதியில் உள்ள நதுவல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நாய் மீது மோதி கவிழ்ந்ததில் மீயெல்ல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார். 

Advertisement

அரலகன்வில-மனம்பிட்டிய வீதியில் உள்ள மெதகம பகுதியில் பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தேவகல பகுதியைச் சேர்ந்த 77 வயதுடையவர் பொலன்னறுவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கடந்த 24 மணித்தியாலயத்தில் மட்டும் வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன