Connect with us

தொழில்நுட்பம்

50 mp செல்பி கேமரா, 7000mAh பேட்டரி… செப்.2-ல் வருகிறது ரியல்மி 15டி 5ஜி! பட்ஜெட்டில் பவர்ஹவுஸ்!

Published

on

Realme 15T 5G

Loading

50 mp செல்பி கேமரா, 7000mAh பேட்டரி… செப்.2-ல் வருகிறது ரியல்மி 15டி 5ஜி! பட்ஜெட்டில் பவர்ஹவுஸ்!

ரியல்மி நிறுவனம் தனது புதிய மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போனான ரியல்மி 15டி (Realme 15T 5G) செப்.2 அன்று வெளியிடப்படும் என உறுதிப்படுத்தி உள்ளது. இது ஏற்கனவே சந்தையில் உள்ள ரியல்மி 15 மற்றும் 15 ப்ரோ மாடல்களுடன் இணைந்து, ரியல்மி 15 வரிசையை மேலும் வலுப்படுத்தும்.முக்கிய சிறப்பம்சங்கள்:புதிய ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போன், டெக்ஸ்சர் செய்யப்பட்ட வடிவமைப்புடன் மேட் ஃபினிஷில் வருகிறது. இதன் மிக முக்கியமான அம்சம், 7,000mAh திறன் கொண்ட பேட்டரி. இது ரெட்மி 15 மாடலுக்குச் சமமானது. மேலும், இந்த போன் 60W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியையும் ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வளவு பெரிய பேட்டரியைக் கொண்டிருந்தாலும், இந்த போன் வெறும் 7.79 மிமீ தடிமன் மற்றும் 181 கிராம் எடை கொண்டது. இந்தத் திறனில் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களில் இதுதான் மிகக்குறைந்த எடை கொண்டது என ரியல்மி நிறுவனம் கூறுகிறது. இது 217 கிராம் எடையுள்ள ரெட்மி 15-ஐ விட மிகவும் இலகுவானது.கேமரா & டிஸ்ப்ளே:ரியல்மி 15டி 5ஜி, முதன்முறையாக இந்த பிரிவில் 50 மெகாபிக்சல் முதன்மை பின்புற சென்சார், 50 மெகாபிக்சல் முன்புறகேமராவுடன் வருகிறது. இந்த 2 கேமராக்களிலும் ஏ.ஐ. அம்சங்கள் உள்ளன. ரெட்மி 15 மாடலில் 8 மெகாபிக்சல் முன்புற சென்சார் மட்டுமே உள்ளது. இரண்டாவது பின்புற கேமரா 2 மெகாபிக்சல் சென்சாரைக் கொண்டுள்ளது. பின்பக்க கேமரா 4K வீடியோ பதிவு செய்யும் வசதியையும் ஆதரிக்கிறது. AI Genie மூலம் பயனர்களுக்கு பல்வேறு ஏஐ அம்சங்கள் மற்றும் உள்ளமைக்கப்பட்ட ஃபில்ட்டர்கள் கிடைக்கும்.இந்த போன் 6.57 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளேயின் அதிகபட்ச பிரகாசம் 4000nits ஆகும். மேலும், இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் IP66, IP68, IP69 மதிப்பீடுகளைப் பெற்றுள்ளது.செயல்திறன் & சாப்ட்வேர்:ரியல்மி 15டி 5ஜி, மீடியாடெக் டைமென்சிட்டி 6400 மேக்ஸ் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது ரியல்மி 14டி-ல் பயன்படுத்தப்பட்ட டைமென்சிட்டி 6300 சிப்செட்டை விட மேம்பட்டது. இது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ரியல்மி UI 6 உடன் அறிமுகமாகும். ரியல்மி இந்த போனுக்கு 3 ஓஎஸ் அப்டேட்களையும், 4 வருட பாதுகாப்பு அப்டேட்களையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ஃப்ளோயிங் சில்வர் (Flowing Silver), சில்க் ப்ளூ (Silk Blue) மற்றும் சூட் டைட்டானியம் (Suit Titanium) ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கும்.அதிகாரப்பூர்வ விலை வெளியீட்டின்போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், 8ஜிபி/128ஜிபி வேரியண்ட் ரூ.20,999 என்ற விலையில் தொடங்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், 8ஜிபி/256ஜிபி மாடல் ரூ.22,999 மற்றும் 12ஜிபி/256ஜிபி மாடல் ரூ.24,999 என விலை நிர்ணயிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அறிமுகத்தின்போது வங்கிச் சலுகைகளும் வழங்கப்படலாம், இது விலையை மேலும் குறைக்க வாய்ப்புள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன