Connect with us

பொழுதுபோக்கு

6 ஏக்கர் நிலம், 1500 மரங்கள்; 10 வகை மாம்பழம், 12 பலா மரம்; பிரமிக்க வைக்கும் நடிகர் கிஷோர் விவசாய பண்ணை!

Published

on

Screenshot 2025-08-30 164637

Loading

6 ஏக்கர் நிலம், 1500 மரங்கள்; 10 வகை மாம்பழம், 12 பலா மரம்; பிரமிக்க வைக்கும் நடிகர் கிஷோர் விவசாய பண்ணை!

பல திரைப்பட நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்க்கையை வெறும் திரைப்பட தொழிலில் மட்டுமே செம்மைப்படுத்திக் கொள்வதில்லை. அவர்களில் பெரும்பாலோரும் வருமானத்தை அதிகரிக்க சில வேறு தொழில்களில் முதலீடு செய்வது பொதுவான நடைமுறையாக உள்ளது.இதற்கான உதாரணமாக, ஹோட்டல்கள், பங்குச் சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற லாபகரமான வணிகங்களில் பணத்தை முதலீடு செய்துகொள்வது வழக்கமாக உள்ளது. ஆனால், தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகர் கிஷோர், அவருடைய வாழ்க்கையை வேறுபட்ட முறையில் அமைத்துள்ளார்.அருமையான குணச்சித்திர வேடங்களுக்காக பிரபலமான கிஷோர், பத்திரமான நிதி முதலீடுகளை பின்பற்றும் பதிலாக, கிராமப்புற வாழ்க்கையைத் தேர்வு செய்துள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகிய இயற்கை சூழலில் 12 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் இயற்கை விவசாயத்துக்கு ஈடுபட்டுள்ளார்.இந்த நிலத்தில் விவசாயத்தின் மூலம் நிலையான வாழ்க்கை முறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு அவர் வேலை செய்து வருகிறார். மேலும், இவரது குடும்பம், குறிப்பாக அவருடைய இரண்டு குழந்தைகளும், அவருடன் சேர்ந்து இந்த விவசாயப் பண்ணையில் வேலை செய்ய, இயற்கை பயிர்கள் வளர்க்க, மண்ணோடு தொடர்பை வைத்திருக்கிறார்கள்.கிஷோரின் இந்தப் பரிமாற்றம், தான் மட்டும் அல்லாமல் தனது குடும்பத்தினருக்கும் ஒரு புதிய வாழ்க்கை அனுபவத்தை வழங்கியுள்ளதைப்போல், மற்றவர்களுக்கு தங்களுடைய வாழ்க்கையைப் புதுப்பிக்க ஊக்கமளிக்கிறது.கிஷோர் தனது கல்லூரி காதலியான விசாலாட்சியை மணந்தார், அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், அவர்கள் அனைவரும் இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ளவர்கள். பெங்களூரு நகரத்திற்கு இயற்கை உணவை வழங்கும் “பஃபலோ பேக் கலெக்டிவ்” என்ற அமைப்பை விசாலாட்சி சொந்தமாக நடத்தி வருகிறார்.தங்கள் பண்ணை வீட்டிற்கு விருந்தினர்களை வரவேற்பதன் மூலமும், இயற்கை பாதுகாப்பின் மதிப்பை அவர்கள் மீது செலுத்துவதன் மூலமும், இந்த ஜோடி இயற்கை வாழ்க்கையை ஊக்குவிக்கிறது. விவசாயத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ள அவர்களது பண்ணை வீட்டில் குடும்பத்தினரின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.முன்னதாக ஒரு ஊடக இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், கிஷோர் தனது தாத்தாவுடன் அவர்களின் மூதாதையர் கிராமத்தில் வசிக்கச் சென்றபோது, ​​இளம் வயதிலேயே விவசாயத்தின் மீது காதல் கொண்டதாக வெளிப்படுத்தினார். தனது தாத்தா தனியாக வயலை பயிரிட்ட விதத்தைப் பார்த்து தான் மயங்கிவிட்டதாகக் கூறினார். விவசாயக் கலையையும், சுற்றுச்சூழல் சமநிலையை ஏற்படுத்த ஒவ்வொரு நபரும் ஏன் இயற்கைக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற கருத்தையும் நெருக்கமாகக் கவனித்து அவரிடமிருந்து கற்றுக்கொண்டார்.பெங்களூரு அருகில் உள்ள அவரது தோட்டத்தில் இருந்து அவர் மனைவி பேசுகையில், “இந்த இடத்தில மண் மிகவும் நல்ல மண் தான். இதில் பல வகையான பலாப்பழங்கள் வளர்க்கலாம். அருமையாக இருக்கும். இந்த இடத்தில அதிகம் மழை தண்ணீர் சேமிக்க முடியும் என்பதால் மிகவும் சுலபமாக இருக்கும். மொத்தமாக கிட்ட தட்ட 1500 மரங்கள் இருக்கு. மாம்பழம், வாட்டர் ஆப்பிள், அவோகேடோ, மொசாம்பி வகைகள் – இப்படி நிறைய வகைகள் இருக்கிறது. இப்போது மாம்பழம் மற்றும் பலாப்பழம் அதிகமாக கிடைக்கும். யானைகளும் கண்டிப்பாக vandhu சில நேரங்களில் பலவற்றை உடைத்து விட்டு சென்றுவிடும். அது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை ஆனால் எங்க விவசாயிகள் நிலத்திற்கு சென்றால் கொஞ்சம் கஷ்டமாகிவிடும். யானையை தாண்டி, நிறைய சிறுத்தை மற்றும் மயில் நிறைய வரும். எங்கள் கோழிகளுக்கும் ஆபத்து தான். இரணவு நேரங்களில் தான் அதிகம் வரும். யாரும் தனியாக செல்ல மாட்டோம். இங்கு வந்து 14  வருடங்கள் ஆகிவிட்டது.” என்று விரிவாக விளக்கினார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன