Connect with us

இந்தியா

அதானி மோசடி பேர்வழி: புதுச்சேரி மக்களுக்கு நாராயணசாமி எச்சரிக்கை

Published

on

pondicherry

Loading

அதானி மோசடி பேர்வழி: புதுச்சேரி மக்களுக்கு நாராயணசாமி எச்சரிக்கை

தேர்தலில் வாக்கு திருட்டுக்கு உதவிய இந்திய தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது. அரியாங்குப்பம் பெரியார் சிலை சதுக்கத்திலிருந்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் புறப்பட்ட பேரணி முருங்கப்பாக்கம், முதலியார்பேட்டை, கடலூர் சாலை வழியாக சென்ற பேரணி வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சதுக்கத்தில் முடிவடைந்தது. இந்த பேரணியில் அரியாங்குப்பம், முதலியார்பேட்டை, ராஜ் பவன், உப்பளம், மங்கலம், ஏம்பலம், நெட்டப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெரும் திரளாக திரளாக கலந்து கொண்டு இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து,கையில் கண்டன பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.பேரணியின் முடிவில் ‌செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அதானியை நேரடியாக சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் பேரம் பேசிவிட்டு தற்போது புதுச்சேரி மின் துறையை அதானிக்கு விற்று விட்டார், ஆனால் தற்பொழுது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்,பொய் சொல்கிறார்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்., என்.ஆர்.காங்கிரஸ் அரசு தூக்கி எறியப்பட வேண்டும், அதானி ஒரு மோசடிக்காரர் மக்கள் விழிப்புணர்வுடன் இல்லை என்றால் நாளை புதுச்சேரி முழுவதும் அதானியின் கையில் சென்று விடும் என்றும் அவர் எச்சரித்தார்.செய்தி: பாபு ராஜேந்திரன்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன