Connect with us

இலங்கை

உயர்தரத்தில் சித்திபெற்றவர்களுக்கு கிடைத்த கௌரவம்

Published

on

Loading

உயர்தரத்தில் சித்திபெற்றவர்களுக்கு கிடைத்த கௌரவம்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களை கௌரவிக்கும் வடமத்திய மாகாண நிகழ்ச்சித்திட்டம் இன்று (31) காலை அனுராதபுரம் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 6 பாடப் பிரிவுகளின் கீழ் 1-10 வரை இடங்களைப் பெற்ற 241 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisement

இதற்காக ஜனாதிபதி நிதியம் 24.1 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளது.

ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே வரவேற்புரையாற்றியதோடு இத்திட்டத்திற்கான நோக்கத்தை தெளிவுபடுத்தினார்.

பிரதான உரையை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நிகழ்த்தியதோடு, ஜனாதிபதி நிதியம் அதன் உண்மையான வகிபாகத்தை உணர்ந்து மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள சேவையை வழங்கி வருவதாகவும், அது குறித்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

Advertisement

காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச ஆகியோரும் விழாவில் உரையாற்றினர். பாராளுமன்ற உறுப்பினர்களான சேன நாணயக்கார, பாக்ய ஸ்ரீ ஹேரத், திலின சமரக்கோன் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் துறைசார் அதிகாரிகளுக்கான விசேட ஒரு நாள் பயிற்சிநெறி நேற்று (30) அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் ஜனாதிபதி நிதிய விடயங்களைக் கையாளும் துறைசார் அதிகாரிகளுக்கு இந்த நிகழ்வில் விளக்கமளிக்கப்பட்டது.

Advertisement

இந்த நிகழ்ச்சித் திட்டம் வடமத்திய மாகாணத்தில் ஜனாதிபதி நிதியத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும், பயனாளிகளுக்கு உயர்தர சேவைகளை வழங்கும், நவீனமயமாக்கப்பட்ட ஒன்லைன் முறைகளை அறிமுகப்படுத்தும் மற்றும் விரைவான சேவைகளை வழங்குவதற்கு தேவையான தெளிவு மற்றும் பயிற்சியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே, அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன