பொழுதுபோக்கு
ஏன் ஒன்னுமே செல்லாம இருக்கீங்க? நான் பாடுவது பிடிக்கலையா? பிரபல இசை அமைப்பாளரிடம் கேட்ட ஜானகி: அந்த பாட்டு பெரிய ஹிட்டு!
ஏன் ஒன்னுமே செல்லாம இருக்கீங்க? நான் பாடுவது பிடிக்கலையா? பிரபல இசை அமைப்பாளரிடம் கேட்ட ஜானகி: அந்த பாட்டு பெரிய ஹிட்டு!
இசையமைப்பாளர் பரணி அவர்கள் தமிழ் திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். இவரது இசைப் பயணம் 1999-ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘பெரியண்ணா’ திரைப்படத்தின் மூலம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ‘பார்வை ஒன்றே போதுமே’ (2001) திரைப்படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, “அவ கண்ண பார்த்தா” மற்றும் “ஏ அசைந்தாடும் காற்றுக்கும்” போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை.இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் பரணி அவர்கள், பாடகி எஸ். ஜானகி அம்மாவுடன் ஏற்பட்ட ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தைப் பற்றி எஸ்.எஸ்.கியூசிக் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார். ஒருமுறை, ஜானகி அம்மா அவரிடம் ஒரு மெட்டைப் பற்றிக் கேட்க வந்ததாகவும், அப்போது அரை மணி நேரத்திற்குள் “ஏ அசைந்தாடும் காற்றுக்கும்…” என்ற பாடலை அவர் உருவாக்கிக் கொடுத்ததாகவும் பரணி கூறுகிறார்.அந்தப் பாடலை இரண்டு முறை கேட்டுவிட்டு, ஜானகி அம்மா உடனடியாக பாடல் பதிவு அறைக்குச் சென்று பாடத் தொடங்கினார். அவர் முழுப் பாடலையும் பாடிக்கொண்டிருந்தபோது, இசையமைப்பாளர் பரணி அமைதியாக இருந்துள்ளார். இதைக் கண்ட ஜானகி அம்மா, ஏன் ஒண்ணுமே செல்லாம இருக்கீங்க தரணி நான் பாடுவது பிடிக்கவில்லையா என்று மென்மையாகக் கேட்டிருக்கிறார்.அதற்குப் பரணி, “அம்மா, நான் எந்த விதமான மாற்றங்களும் இல்லாமல், நான் போட்ட மெட்டை அப்படியே பாடிட்டீங்க. அது மிகச் சிறப்பாக இருக்கிறது” என்று கூறினாராம். இந்தச் சம்பவம் நடந்த பிறகு, “ஏ அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா காதலா” என்ற அந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்று, ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது.’ஏ அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா’ என்ற பாடல் இசையமைப்பாளர் பரணி இசையமைத்த ‘பார்வை ஒன்றே போதுமே’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இசையமைப்பாளர் பரணி, தனது இசையில் பல திறமையான பாடகர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். குறிப்பாக, பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அவர்களுடன் இணைந்து பணியாற்றிய சில பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
