பொழுதுபோக்கு
ஒரு நாளைக்கு ஒரு ‘ஷோ’தான் ரிலீஸ்; விக்ரம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்: மனம் திறந்த பாலிவுட் இயக்குனர்!
ஒரு நாளைக்கு ஒரு ‘ஷோ’தான் ரிலீஸ்; விக்ரம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்: மனம் திறந்த பாலிவுட் இயக்குனர்!
இன்றைய தலைமுறையின் சிறந்த நடிகர்களில் ஒருவராக, ஏராளமான ரசிகர்களைக் கொண்ட ஒரு முன்னணி நட்சத்திரமாக விக்ரம் இருந்தாலும், அவருடைய இந்த வெற்றி அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அவருடைய தந்தை வினோத் ராஜ், ஒரு சிறிய நடிகர். அதேபோல, அவருடைய தாய்மாமா தியாகராஜன் ஒரு புகழ்பெற்ற நடிகர் மற்றும் இயக்குனர். ஆனாலும் விக்ரமுக்கு சினிமாவில் ஆரம்பத்தில் வெற்றி அவ்வளவு சுலபமாக அமையவில்லை.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்1990-ல் வெளியான என் காதல் கண்மணி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான பிறகு, அவர் பல படங்களில் துணை வேடங்களில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், சினிமாவில் அவர் சர்வே செய்வதற்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் அவர் நடித்து தனது நடிப்பை மேம்படுத்திக்கொண்டார். அதேபோல், திரைப்பயணத்தின் ஆரம்ப காலகட்டத்தில், அவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றினார். நடிகர் அஜித்குமார், பிரபு தேவா, அப்பாஸ் போன்ற நடிகர்களுக்குப் பின்னணி பேசியுள்ளார்.அமராவதி, காதலன், காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் அவருடைய டப்பிங் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப், ராம் கோபால் வர்மா இயக்கிய சத்யா (1998) திரைப்படத்தின் தமிழ் பதிப்பில், மனோஜ் பாஜ்பாய் நடித்த ‘பிகு மாத்ரே’ கதாபாத்திரத்திற்கு விக்ரம் தான் பின்னணி குரல் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.மேலும், பாலா இயக்கிய சேது (1999) திரைப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு விக்ரமின் வெற்றிச் சரித்திரம் தன் கண் முன்னே நிகழ்ந்ததைக் கண்டு அனுராக் காஷ்யப் மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறினார். சுதீர் சீனிவாசன் உடனான ஒரு உரையாடலில் அனுராக் காஷ்யப் இது குறித்து பேசியுள்ளார். சத்யா திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது, விக்ரம் தான் பிகு மாத்ரே கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்தார். அப்போது அவர் டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் நடிகராக இருந்தார்.அவருக்குப் போதிய வேலை இல்லை. அதன் பிறகு அவர் சேது படத்தில் நடித்தார். முதலில், அந்தப் படத்திற்கு பகல் 12 மணிக்கு ஒரே ஒரு காட்சிதான் இருந்தது. நான் சக்ரி (ஜேடி சக்ரவர்த்தி) உடன் சேர்ந்து அந்தப் படத்தைப் பார்த்தோம். அதன் பிறகு, அந்தப் படம் பெரும் வெற்றி அடைவதைக் கண்டோம். ஒருவரின் நம்பிக்கை, தன்னம்பிக்கை, மற்றும் சரியான நடிகர் தேர்வு, மற்ற எதைக் காட்டிலும் பெரிது” என்று பகிர்ந்துகொண்டார்.A post shared by SCREEN (@ieentertainment)அந்தப் படத்தால் தான் ஈர்க்கப்பட்டு, தனது குருவான ராம் கோபால் வர்மாவிடம் சென்று, அந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்தப் படத்தை இயக்கும் பணிகளை அனுராக் தொடங்கிய போதிலும், சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொண்ட பிறகும், அவர் நெஞ்சு முடியை ஷேவ் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தியதால், அனுராக் அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டார். இறுதியில், சேது திரைப்படம் 2003-ல் நடிகர்-இயக்குனர் சதீஷ் கௌஷிக் இயக்கத்தில் தேரே நாம் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.2000-களின் முற்பகுதியில், நடிகர் தனுஷ் நடித்த முதல் திரைப்படமான துள்ளுவதோ இளமை (2002) படத்தை, வசனங்களுக்கான சப்-டைட்டில் இல்லாமல் பார்த்ததாகவும், இருப்பினும், சிறந்த திரைக்கதை காரணமாக அதன் சாராம்சத்தைப் புரிந்துகொள்ள முடிந்ததாகவும் அனுராக் காஷ்யப் நினைவு கூர்ந்தார். மேலும், தனுஷின் முதல் திரைப்படம் மற்றும் அவருடைய வெற்றிப் பயணம், கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் (2012) திரைப்படத்தில் நவாசுதீன் சித்திக்கை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க தனக்கு தைரியம் கொடுத்ததாகவும் கூறினார்.அப்போது, நவாசுதீனைத் தேர்ந்தெடுத்தது ஒரு வித்தியாசமான தேர்வாக இருந்தது. ஏனென்றால், அவரைப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் இந்திப் படங்களில் கதாநாயகனாக நடித்ததில்லை. ஆனால், தனுஷின் வெற்றிப் பயணமும், ராம் கோபால் வர்மாவின் நடிகர் தேர்வு முறைகளும், நவாசுதீனை அச்சமின்றி நடிக்க வைக்க எனக்கு முக்கியப் பங்கு வகித்தது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
