இலங்கை
கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் நால்வர் கைது!
கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் நால்வர் கைது!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோணாவில் பகுதியில் நேற்று மாலை வாள்கள் மற்றும் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று மாலை சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய நான்கு சந்தேகநபர்கள் கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை சோதனையிட்டபொழுது, மறைத்து வைத்திருந்த நான்கு வாள்கள் மற்றும் 07 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை கிளிநொச்சி பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
