சினிமா
பொண்டாட்டி ஐ லவ் யூ! ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட வீடியோ.. சிக்கிக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்
பொண்டாட்டி ஐ லவ் யூ! ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட வீடியோ.. சிக்கிக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்
பிரபல சமையல் கலைஞர் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் ரசிகர் ஆதரவு பெற்றிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றிய ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். “என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார்” என அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா புகார் அளித்ததைத் தொடர்ந்து, இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் தனது சமையல் வீடியோக்கள், வித்தியாசமான ஃபுட் ரிவ்யூஸ், மற்றும் மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் விதமான காணொளிகளின் மூலம் புகழ் பெற்றவர். ஆனால், இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் பொது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் ஜாய் கிரிஸில்டா, சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டார். அவர் ஏற்கனவே திருமணம் செய்தவர். ஆனால், அவர் முதல் மனைவியை விவாகரத்து செய்ததாக கூறி, என்னை இரண்டாவதாக திருமணம் செய்தது தவறு. இது சட்டத்திற்குப் புறம்பானது” என்று கூறியுள்ளார்.மேலும், “என்னுடைய குழந்தைக்கான பாதுகாப்பு வேண்டும். மாதம்பட்டி ரங்கராஜ் தான் என் குழந்தையின் தந்தை. எனவே நான் வழக்கு பதிவு செய்துள்ளேன். அவர் எவ்வளவு பிரபலமானவராக இருந்தாலும், என் குழந்தையின் நலனுக்காக என்னால் இந்த வழக்கை தொடராமல் இருக்க முடியவில்லை” எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.இந்த சர்ச்சை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஜாய் கிரிஸில்டா தனது X தளப்பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியை “பொண்டாட்டி” என அழைத்து, காதல் வார்த்தைகளால் பேசி இருக்கிறார்.“ஓய் பொண்டாட்டி… என்னடி பண்ற பொண்டாட்டி… ஐ மிஸ் யூ… ஐ லவ் யூ பொண்டாட்டி…” என அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ, அவர்களுக்குள் உண்மையாக ஒரு உறவு இருந்ததைக் காட்டும் ஆதாரமாக ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ளார். இதன் மூலம், அவர் கூறிய புகாருக்கு அடிப்படை ஆதாரம் உள்ளது என வலியுறுத்துகிறார்.
