பொழுதுபோக்கு
வீடு கட்டுனா நான் மட்டும் தான் ஜாலியா இருப்பேன்; ஆனா இதனால் தினமும் 100 பேர் ஜாலியா இருப்பாங்க: கே.பி.ஒய் பாலா புது ஐடியா!
வீடு கட்டுனா நான் மட்டும் தான் ஜாலியா இருப்பேன்; ஆனா இதனால் தினமும் 100 பேர் ஜாலியா இருப்பாங்க: கே.பி.ஒய் பாலா புது ஐடியா!
சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவில் ஹீரோவாக உயர்ந்துள்ள நடிகர் கே.பி.ஒய்.பாலா, சொந்தமாக ஒரு இலவச மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற வகையில் புதிதாக கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறார்.சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைனர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வந்தாலும், பாலா சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.மலை கிராம மக்களுக்கு உதவும் வகையில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள் இவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று, சினிமா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பாலாவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் திரை நட்சத்தரங்கள் பலரும் பாலாவின் செயலுக்கு உதவி வருகின்றனர்.இதனிடையே கே.பி.ஒய் பாலா, காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். 2018-ம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜூங்கா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், புலிக்குத்தி பாண்டி, லாபம், நாய் சேகர், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் காமெடியனாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான, சென்னை சிட்டி கேங்ஸ்டர் பாடத்தில் நடித்திருந்த பாலா, காந்தி கண்ணாடி படத்தில் நாயகனாக நடித்துள்ளர்.நமிதா கிருஷ்ணமூர்ததி நாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் பாலா, மக்களுக்கு தான் உதவி செய்வது, திரைப்படததில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தனது கனவை நிறைவேற்றும் வகையில் ஒரு இலவச மருத்துவமனை கட்டி வருவதாக பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பாலா குறிப்பிட்டுள்ளார், மருத்துவமனை கட்டிடம் கட்டப்படும் இடத்தையும் காட்டியுள்ளார்.இது எனது மிக பெரிய கனவு, இது முடியுமா என்று தெரியவில்லை. இந்த இடத்தை வாங்குவதே எனது 6 வருட உழைப்பு. இதில் வீடு கட்டுவேன் என்றுதான் நினைத்தார்கள். நான் வீடு கட்டி வாழ்ந்தால், நான் ஜாலியாக இருப்பேன், அடுத்து வரும் என் குடும்பத்தினர் ஜாலியாக இருப்பார்கள். ஆனால் ஒரு இலவச க்ளனீக் வைத்தால் ஒரு நாளைக்கு சுமார் 100 பேர் ஜாலியாக சந்தோஷமாக இருப்பார்கள் என்று பாலா கூறியுள்ளார்.
