இலங்கை
வென்னப்புவ துப்பாக்கி சூடு ; ஒருவர் கைது
வென்னப்புவ துப்பாக்கி சூடு ; ஒருவர் கைது
வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (31) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார் மற்றும் துப்பாக்கி என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
