பொழுதுபோக்கு
4 வருட காதல், நான் பெருந்தன்மையா எதுவும் பண்ணல; ஜோதிகாவை கரம் பிடிக்க சூர்யா வைத்த செக்: சிவகுமார் ஓபன் டாக்!
4 வருட காதல், நான் பெருந்தன்மையா எதுவும் பண்ணல; ஜோதிகாவை கரம் பிடிக்க சூர்யா வைத்த செக்: சிவகுமார் ஓபன் டாக்!
திரையுலகில் பல காதல் திருமணங்கள் நடந்திருந்தாலும், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா திருமணம் எப்போதும் ஒரு சுவாரசியமான கதைதான். இந்த திருமணத்திற்கு நடிகர் சிவகுமார் பெரிய மனதுடன் சம்மதித்தார் என்று இதுவரை பலரும் கூறி வந்தனர். ஆனால், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சிவகுமார் அளித்த விளக்கம், அந்த திருமணத்திற்குப் பின்னால் இருந்த உண்மையான கதையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.”நான் ஒன்றும் பெரிய மனசு பண்ணி அவங்க திருமணத்துக்கு சம்மதிக்கல” என்று வெளிப்படையாகவே பேசத் தொடங்கினார் சிவகுமார். சூர்யாவும் ஜோதிகாவும் எடுத்தது அவசர முடிவு அல்ல, அவர்களின் காதல் நான்கு வருடங்கள் நீடித்தது. இருவரும் உறுதியாக இருந்த பிறகே, தங்கள் திருமண விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.காதல் காட்சிகளில் நடித்தது பற்றி சிவகுமார் ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்து கொண்டார். “நான் கிட்டத்தட்ட 150 படங்களில் காதல் காட்சிகளில் நடிச்சிருக்கேன். அப்படி இருந்தும் என் மகன்கள் காதல் திருமணம் செஞ்சுக்கிட்டா, நான் அதை எதிர்ப்பேன்னு சொல்றது என்ன நியாயம்?” என்று அவர் கேள்வி எழுப்பினார். இது, தன் மகன்களின் விருப்பத்தை அவர் புரிந்து கொண்டதற்கான தெளிவான வெளிப்பாடாக இருந்தது.இந்தக் கதையின் மிக முக்கியமான திருப்பம், சூர்யா தனது தந்தையிடம் வைத்த ‘செக்மேட்’. தங்கள் திருமணத்திற்கு சிவகுமார் சம்மதிப்பாரா என்று கேள்வி எழுந்தபோது, சூர்யா மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் ஒரு முடிவை அவரிடம் கூறியிருக்கிறார். “திருமணம் செஞ்சு வைச்சா, சந்தோஷமா வாழ்கிறோம்; இல்லைனா, அப்படியே இருந்து விடுகிறோம்” என்று ஜோதிகாவை திருமணம் செய்ய தனது தந்தையிடம் சூர்யா ஒரு கண்டிப்பான வேண்டுகோளை முன்வைத்தார்.ஒரு தந்தை என்ற முறையில், மகனின் இந்த உறுதியான முடிவுக்குப் பிறகு, சிவகுமார் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இந்த விளக்கத்தின் மூலம், சூர்யா-ஜோதிகா திருமணம் என்பது சிவகுமாரின் பெருந்தன்மை அல்ல, மாறாக மகனின் ஆழமான காதலுக்கு முன்னால் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதற்கான ஒரு சான்று என்பது இப்போது உறுதியாகியுள்ளது.
