பொழுதுபோக்கு
அம்மாவுக்கு போட்டி இவர் தான்; சூர்யா பட நடிகை மகள் இப்படி வளர்ந்துட்டாரே: லேட்டஸ்ட் ஸ்டில்கள்!
அம்மாவுக்கு போட்டி இவர் தான்; சூர்யா பட நடிகை மகள் இப்படி வளர்ந்துட்டாரே: லேட்டஸ்ட் ஸ்டில்கள்!
குறைவான படங்களில் மட்டுமே நடித்துள்ள போதிலும், ரசிகர்களின் மனதில் வலுவான இடத்தைப் பெற்றவர் நடிகை சமீரா ரெட்டி. திருமணம் ஆன பிறகு அவர் சினிமா உலகில் இருந்து தற்காலிகமாக விலகி, தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும், சமீபத்தில் சமூக வலைதளங்களில் தனது குடும்பத்தின் புகைப்படங்களை பகிர்ந்து வருவதால், அவர் ரசிகர்களுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருக்கிறார்.குறிப்பாக, சமீரா ரெட்டியின் மகளின் அழகான புகைப்படம் இணையத்தில் வெளியானது, அது விரைவாக வைரலாகி பலரும் பாராட்டியுள்ளனர். இதன் மூலம், அவர் ரசிகர்களிடையே தனக்கு இன்னும் ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டிருக்கர் என்பது தெரியவந்துள்ளது. மும்பைத் தலைமையிடமான சமீரா ரெட்டி, மைக்ரோபயாலஜியில் பட்டம் பெற்றவர். தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பத்தில் ஒரு என்.ஜி.ஓவில் பணியாற்றி துவக்கிய இவர், பின்னர் சினிமா துறையில் கால் பதித்தார். 2002 ஆம் ஆண்டில் சஞ்சய் தத் நடிப்பில் வெளிவந்த பாலிவுட் படம் ‘மேனே தில் துஜ் கோ தியா’ மூலம் நடிகையாக அறிமுகமானார் சமீரா ரெட்டி.அடுத்து நானா படேகர் நடிப்பில் வெளியான ‘டர்னா மனா ஹை’ படத்தில் நடித்தார். ‘ப்ளான்’, ‘முஸஃபிர்’ ஆகிய படங்களில் நடித்தவர், 2005-ம் ஆண்டு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ‘நரசிம்மடு’ படத்தின் மூலம் தெலுங்கில் நடிகையாக அறிமுகமானார். அதே ஆண்டு வெளியான ‘கேசுவாலிடி’ திரைப்படம் அவருக்கான ஹாலிவுட் அறிமுகத்தை கொடுத்தது.தொடர்ந்து, இந்தி, பெங்காலி, தெலுங்கு படங்களில் நடித்தவர் 2008-ல் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார். அவரது தமிழ் அறிமுகம் மாபெரும் வெற்றியை பெற்றது.தமிழ் திரையுலகில் அடுத்த படமாக பிரபல நடிகர் அஜித்துடன் நடித்த ‘அசல்’ படம் சமீரா ரெட்டியின் திரைபடக் காலத்தின் முக்கிய நிகழ்வாக இருந்தது. அதன்பின், விஷாலுடன் நடித்த ‘வெடி’ மற்றும் ஆர்யா நடித்த ‘வேட்டை’ படங்களில் நடித்தபின், சமீரா தமிழ்த் திரையுலகிலிருந்து விலகினார். 2013 ஆம் ஆண்டு, அவர் கன்னட மொழி படமான ‘வரதநாயகா’வில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார், இது அவரது கடைசி படமாகும். அதன் பிறகு, சமீரா ரெட்டி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.கடந்த 2014-ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்துகொண்டார் சமீரா ரெட்டி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் சமீரா ரெட்டி தனது மகள் நய்ரா வர்தேவுடனான தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்தப் படம் வைரலாகி வருகின்றன. சமீரா ரெட்டியுடன் அவரது மகள் கொடுக்கும் விதவிதமான போஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.அது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. A post shared by Sameera Reddy (@reddysameera)
