Connect with us

இலங்கை

ஒன்லைன் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்கு இணுவிலில் விண்ணப்பிக்கலாம்!

Published

on

Loading

ஒன்லைன் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்கு இணுவிலில் விண்ணப்பிக்கலாம்!

2024/2025ஆம் கல்வி ஆண்டுக்குரிய பல்கலைக்கழக அனுமதிக்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான விண்ணப்பங்களைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் தெரிவுசெய்யப்பட்ட நிறுவனமான இணுவில் பொதுநூலகத் தகவல் தொழில்நுட்ப மையத்தில் இன்று திங்கட்கிழமை முதல் தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பெற்று ஒன்லைன்மூலம் விண்ணப்பிக்கமுடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை இலக்கம், உயர்தரப் பரீட் சைச் சுட்டெண், இலங்கை வங்கியில் பணம் செலுத்திய துண்டு அல்லது ஒன்லைன்மூலம் பணம் செலுத்தக்கூடிய வசதிகள் இருப்பின் பணம் செலுத்தும் அட்டை (ATM Card) வசதி, முதல் விண்ணப்பப்படிவம் நிரப்பப் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரியுடன் முதற்படிவத்தில் உள்நுழையக் கொடுக்கப்பட்ட கடவுச்சொல் (password), முதல் விண்ணப்பப் படிவம் நிரப்பப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கத்துடன் கூடிய கைத்தொலைபேசி ஆகியவற்றைத் தவறாது கொண்டுவரவும். மேலதிகத் தகவல்களுக்கு 0779775650, 07707 37919, 0774431851, 0212241930 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன