Connect with us

இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்கள் சேகரிப்பு!

Published

on

Loading

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்கள் சேகரிப்பு!

கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை நேற்று (31) காத்தான்குடி முகைதீன் மெதத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசல் மண்டபத்தில் இடம்பெற்றது. 

மட்டக்களப்பு, குருக்கள் மடம் எனும் இடத்தில் 1990 ஆம் ஆண்டு புலிகளினால் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் மனித புதைகுழியை தோண்டுவதற்கான அனுமதியை களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் வழங்கியதையடுத்து கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை நேற்று (31) காத்தான்குடி முகைதீன் மெதத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசல் மண்டபத்தில் இடம்பெற்றது. 

Advertisement

குரல்கள் அமைப்பு,  காத்தான்குடி பள்ளி வாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை முறைப்பாட்டாளர், அப்துல் மஜீத் அப்துர் ரஊப் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை இடம்பெற்றது. 

இதன்போது 12.07.1990 அன்று புனித ஹஜ் கடமையை முடித்துக் கொண்டும், கல்முனை பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைக்காகவும் சென்று காத்தான்குடிக்கு திரும்பி வரும்போது அவர்கள் கடத்தப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் ஆவணங்களுடன் வந்து தகவல்களை வழங்கினர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன