இலங்கை
ஜெனிவாவை எதிர்கொள்ள இலங்கை அரசு புதுவியூகம்
ஜெனிவாவை எதிர்கொள்ள இலங்கை அரசு புதுவியூகம்
சர்வதேச உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கிறார் அமைச்சர் விஜித ஹேரத்
ஜெனிவாவை எதிர்கொள்வதற்கு முன்னர். கொழும்பில் பல முக்கியமான சந்திப்புகளில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஈடுபடவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 6ஆம் திகதி அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழுவினர் இலங்கையில் இருந்து புறப்படவுள்ளனர். இதற்கு முன்னதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என அறியமுடிகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவைக் கோரும் வகையிலேயே அவர் நட்பு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இதன்போது உள்ளகப் பொறி முறையை வலுப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக் கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நகர்வுகள் தொடர்பில் அவர் விளக்கமளிக்கவுள்ளார் என்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், உள்ளகப் பொறிமுறையை வலுப்படுத்துவதற்காக அங்கத்துவ நாடுகளின் ஒத்துழைப்பையும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கோரவுள்ளார் என்றும் தெரியவருகின்றது.
