இலங்கை
நன்றி கூறினார் ரணில்
நன்றி கூறினார் ரணில்
தான் கைது செய்யப்பட்டபோது தனக்கு உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தனது வீட்டிலிருந்து வீடியோ இணைப்பு மூலம் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு நன்றியை தெரிவித்தார்.
நான் கைது செய்யப்பட்டபோது என்னுடன் நின்ற அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றாவது ஒரு நாள் உங்களைச் சந்திப்பேன் என்று நம்புகிறேன்” என்றார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது மருத்துவ மேற்பார்வையில் வீட்டில் ஓய்வெடுத்து வருகின்ற நிலையில், மீண்டும் நன்றி கூறுகிறேன் என்றார்.
