இலங்கை
யாழில் விரட்டியடிக்கப்பட்ட பொதுமக்கள்!
யாழில் விரட்டியடிக்கப்பட்ட பொதுமக்கள்!
யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இன்று காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக விரட்டியடித்தனர்.
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் பகுதியில் அபிவிருத்தி பணிக்கான அடிக்கலை நாட்டுவதற்காக ஜனாதிபதி யாழ். வந்தபோது அப்பகுதியில் கூடிய காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் அப்பகுதியில் நிற்கவிடாமல் விரட்டியடிக்கப்பட்டனர்.
பொலிஸார், வயோதிபர்கள் எனவும் பாராது போராட்டக்காரர்களை தகாத வார்த்தைகளை பேசி முதுகில் பிடித்து தள்ளினர். கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மயிலிட்டிக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
