இலங்கை
யாழ்ப்பாணம் நல்லூர் திருவிழாவில் தவறவிட்ட பொருள்கள் மாநகரசபையில்
யாழ்ப்பாணம் நல்லூர் திருவிழாவில் தவறவிட்ட பொருள்கள் மாநகரசபையில்
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாக் காலத்தில் பக்தர்களால் தவறவிடப்பட்ட நிலையில் வேறுநபர்களால் கண்டெடுக்கப்பட்டு, உற்சவக் காலப்பணிமனையில் ஒப்படைக்கப்பட்ட பொருட்கள் தற்போது மாநகரசபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் உரிமையாளர்கள் தகுந்த ஆதாரத்துடன் அடையாளத்தை உறுதிப்படுத்தி மாநகரசபையின் நிர்வாகக் கிளையில் பெற்ருக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அலுவலக நாள்களில் அலுவலக நேரத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி வரை பெற்றுக் கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
