சினிமா
3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும், ஏன்னா… ஜான்வி கபூர்
3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும், ஏன்னா… ஜான்வி கபூர்
இந்திய சினிமாவை கலக்கிய மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்தோடு ஹிந்தி சினிமாவில் நடிக்க தொடங்கியவர் நடிகை ஜான்வி கபூர்.தனது அம்மா போல் இல்லை என்றாலும் அவர் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி அதில் பயணித்து வருகிறார். ஜான்வி கபூர் நடிப்பில் ஹிந்தியில் அண்மையில் பரம் சுந்தரி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது, படத்திற்கும் நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது.இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் ஒரு பேட்டியில் தனக்கு 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை என கூறியுள்ளார்.காரணம் 2 பெற்றுக்கொண்டால் அதிகம் சண்டை போடுவார்களாம், 3 குழந்தை இருந்தால் இருவர் சண்டை போட்டாலும் மற்றொருவர் வந்து சமாதானம் செய்வாராம்.இதனை கேட்ட ரசிகர்கள் என்ன ஆசை இது என ஜாலியாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
