இலங்கை
இராணுவ கெப் வாகனமும் காரும் மோதி விபத்து
இராணுவ கெப் வாகனமும் காரும் மோதி விபத்து
திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 13ம் கட்டை சந்தியில் இராணுவத்திற்கு சொந்தமான கெப் ரக வாகனமும் கார் ஒன்றும் மோதி செவ்வாய்க்கிழமை (02) விபத்துக்குள்ளானது.
தம்பலகாமம் 13ம் கட்டை சந்தி வளைவில் திருப்பிய இராணுவ கெப் ரக வாகனமும் திருகோணமலையில் இருந்து வந்த காரும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதுடன் இவ் விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
