Connect with us

பொழுதுபோக்கு

எனக்கு கட்டிப்பிடிக்க வராது, ஆனா‌ உங்களை கல்யாணம் பண்ணுவேன்; நேர்காணலில் திருமணம் தேதி சொன்ன கூமாபட்டி தங்கபாண்டி!

Published

on

koomapatti Virudhunagar

Loading

எனக்கு கட்டிப்பிடிக்க வராது, ஆனா‌ உங்களை கல்யாணம் பண்ணுவேன்; நேர்காணலில் திருமணம் தேதி சொன்ன கூமாபட்டி தங்கபாண்டி!

ஏங்க… என்ற வார்த்தைக்கு சொந்தக்காரரும் கூமாப்பட்டியை வீடியோ எடுத்து மிகவும் பிரபலமான தங்கபாண்டி ஜீ தமிழ் சிங்கிள் பசங்க ஷோ மூலம் மீண்டும் பிரபலமானவர். இந்நிலையில் அந்த ஷோவில் இவருக்கு ஜோடியாக சாந்தினி  நடிக்கிறார். இவர்கள் இருவரும் தற்போது சினி உலகம் யூடியூப் பக்கத்திற்கு பேட்டி அளித்தனர்.   தங்கபாண்டி, தனது கிராமமான கூமாப்பட்டியை வீடியோ எடுத்து மிகவும் பிரபலமானார். பின்னர் இவருக்கு ஜீ தமிழ் ‘சிங்கிள் பசங்க’ ஷோவில் வாய்ப்பு கிடைத்தது. இந்த சோவில் இணைந்த பிறகு, ஒரு கலைஞராக அவருக்குப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அவரது புகழ், தனது கிராமத்தில் இருந்து தமிழகம் முழுவதும் பரவியது. நேர்காணலில், தங்கபாண்டியின் வீடியோக்களால் அவரது சொந்த ஊரான கூமாப்பட்டிக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகவும், இதற்காக அவர் அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்க அழைக்கப்பட்டதாகவும் கூறினார். இந்த வெற்றியை அவரது குடும்பத்தினரும் கிராம மக்களும் கொண்டாடி வருவதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய கூமாப்பட்டி தங்கப்பாண்டி தனது திருமணம் குறித்து கூறியுள்ளார். நிகழ்ச்சியில் தன்னோடு சேர்ந்து ஆடும் சாந்தினியை திருமண செய்ய விரும்புவதாகவும் நவம்பர் மாதம் அவரை ஊருக்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் கல்யாண தேதி நிச்சயிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார். இதை கேட்டது சாந்தினிக்கே ஷாக் ஆகிவிட்டது. பின்னர் தங்கபாண்டி, தங்கள் உறவு தொழில் ரீதியானது மட்டுமே என்று தெளிவுபடுத்தினார். ஷோவுக்காக மட்டுமே கட்டிப்பிடிப்பது போன்ற செயல்கள் செய்யப்படுகின்றன என்றும், அது எப்படி தொழில் ரீதியாக செய்யப்பட வேண்டும் என்று சாந்தினி தனக்கு கற்றுக்கொடுத்ததாகவும் கூறுகிறார்.மேலும் தங்கள் உறவு முழுக்க முழுக்க தொழில்முறை ரீதியானது என்றும், நிகழ்ச்சிக்காக மட்டுமே தாங்கள் நெருக்கமாகப் பழகுகிறோம் என்றும் கூறினர். தங்களுக்கு கட்டிப்பிடிப்பது போன்ற செயல்கள் புதிது என்றும், அதை எப்படி தொழில்ரீதியாக செய்வது என்று சாந்தினி தனக்குக் கற்றுக்கொடுத்ததாகவும் தங்கபாண்டி விளக்கினார். சாந்தினியும் இதை உறுதிப்படுத்தி, தங்களுக்கிடையே காதல் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். சாந்தினியும், தங்கபாண்டியுடன் தனக்கு எந்த உறவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். அவர்களின் நெருக்கம் ஷோவுக்காக மட்டுமே என்று கூறுகிறார்.இந்த நேர்காணலில், தங்கபாண்டி சாந்தினிக்கு தனது நன்றியை தெரிவித்தார். சாந்தினி அவருக்கு நடிப்பு, மேடையில் பேசுதல் மற்றும் நகரத்தில் உள்ளவர்களுடன் பழகுதல் போன்ற விஷயங்களை கற்றுக்கொடுத்ததாக கூறினார். மேலும், தனது கூச்சத்தை போக்கி தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள சாந்தினி உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார். சாந்தினி, தாங்கபாண்டியை ஒரு “நல்ல மனிதனாக” வழிநடத்துவதே தனது நோக்கம் என்று விவரித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன