இலங்கை
ஓட்டோ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
ஓட்டோ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லவாயப் பிரதான வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூவர் படுகாயமடைந்து மேலதிக சிகிச்சைக்கென மொனராகலை தள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் இரத்தினபுரியைச் சேர்ந்த 42 வயதுடையவராவார். ஓட்டோ வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகிக் குடை சாய்ந்து விபத்துள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
