Connect with us

சினிமா

டாக் லவ்வர்ஸ ஒரு சாக்கு மூட்டையில கட்டி மார்ஸ்ல தூக்கிப் போட்டுடணும்..! சுசித்ரா ஆதங்கம்

Published

on

Loading

டாக் லவ்வர்ஸ ஒரு சாக்கு மூட்டையில கட்டி மார்ஸ்ல தூக்கிப் போட்டுடணும்..! சுசித்ரா ஆதங்கம்

தெருவில் திரியும் வெறிநாய்களின் அட்டகாசம் நாட்டில் பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தெருவில் நடந்து செல்லும் பொழுது வெறிநாய்களின் தாக்குதல்களுக்கு உள்ளன சம்பவங்கள் அதிகரித்துள்ளன.குழந்தைகள் தெருவில் விளையாடும் போதும், கடைக்குச் சென்று திரும்பும் போதும் நாய்கள் துரத்துதல் மற்றும் கடிப்பது போன்ற பல புகார்கள் பதிவாகியுள்ளன. இதனால் குழந்தைகள் காயமடைந்துள்ளதோடு உயிரிழந்தும் உள்ளனர்.இவ்வாறு நாட்டில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்த நிலையில், இந்த பிரச்சினைக்கு மிகக் கட்டாயமாக அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.எனினும் சமூக ஊடகங்களில், டாக் லவ்வர்ஸ் மற்றும் பிரபலங்கள், தெருநாய்கள் பற்றி ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், பாடகியும் பிக்பாஸ் பிரபலமுமான சுசித்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்இ டாக்க இப்படி எல்லாம் லவ் பண்ணி வைப்பிங்களா? நாய்க்கு சப்போர்ட் பண்ணுவீங்க.. மனுசனுக்கு சப்போர்ட் பண்ண மாட்டிங்க… ஏங்க..இந்த டாக் லவ்வர்ஸ் மனுஷ விரோதிங்களா இருக்காங்க.. இவங்களையும் ஒரு சாக்கு மூட்டையில போட்டு மார்ஸ்ல தூக்கிப் போட்டுடணும்.. தெரு நாய்கள் தொல்லை பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. இதனால் அரசாங்கமே முதல் முறையாக உருப்படியாக ஒரு விஷயத்தை செய்ய முன் வந்து இருக்கு என குறிப்பிட்டு உள்ளதோடு கோபிநாத் தனிக்கட்சி ஆரம்பித்து சிம் ஆக வர வேண்டும் எனவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன