இலங்கை
நாடாளுமன்ற உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட குழு நியமிப்பு!
நாடாளுமன்ற உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட குழு நியமிப்பு!
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையிலான நாடாளுமன்ற சபைக் குழு, உணவு மற்றும் பானங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட குழுவை நியமித்துள்ளது.
பத்தரமுல்ல சுகாதார அதிகாரி தலைமையில் கடந்த ஏப்ரலில் நாடாளுமன்ற வளாகத்தின் சமையலறைகளில் முதன்முதலில் உணவுப் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சுகாதார பரிசோதகர்கள் அவதானிப்புகளைக்கும் விரிவான அறிக்கையை சமர்ப்பித்தனர்.
குறைபாடுகளை நிவர்த்தி செய்ய புதிய குழுவில் சுகாதார அதிகாரிகள், பொறியியலாளர்கள் மற்றும் உணவு பராமரிப்பு ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், மாதிவெலவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோக பராமரிப்பு பிரச்சினைகளையும் சபை குழு மதிப்பாய்வு செய்து, சபாநாயகர் அவசர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
