பொழுதுபோக்கு
நீங்க நைட் பண்ணுவீங்களே அதுதான் மிக்ஸிங்; மாதம்பட்டி ரங்கராஜை கலாய்த்த குரேஷி: குக் வித் கோமாளி வீடியோ!
நீங்க நைட் பண்ணுவீங்களே அதுதான் மிக்ஸிங்; மாதம்பட்டி ரங்கராஜை கலாய்த்த குரேஷி: குக் வித் கோமாளி வீடியோ!
தமிழ் திரையுலகில் தெரிந்த முகமாக இருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். மெகந்தி சர்கஸ், பென்குயின் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர், பிரபலமான சமையல் கலைஞராகவும் இருக்கிறார். எல்லா செலிபிரிட்டிக்களின் வீட்டு விசேஷங்களுக்கும் இவர்தான் கேட்டரிங் வேலை செய்து காெடுப்பார். இந்த நிலையில், அவர் பேசுபொருளாக மாறுவதற்கு காரணம் அவரது 2வது திருமணம்தான்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் புது நடுவராக வந்தவர், மாதம்பட்டி ரங்கராஜ். இவர் கடந்த சில நாட்களாக இணையத்தில் பேசுபொருளாக இருக்கிறார். காரணம், இவருடன் திருமணம் ஆகிவிட்டதாக செலிப்ரிட்டி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பதிவிட்டிருந்தார். கூடவே, தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவரது மனைவியின் பெயர் ஸ்ருதி. இவர்களுக்கு 2 குழந்தைகளும் இருக்கின்றனர். திருமண உறவில் இருக்கும் இவர், இப்படி இன்னொருவரை திருமணம் செய்து இருந்தது பெரும் பேசுபொருளாக மாறியது. தங்களது உறவு குறித்து ஜாய் கிரிஸில்டா தொடர்ந்து பதிவிட்டு வரும் நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் இது குறித்து வாய் திறவாமல் இருக்கிறார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சி, கிட்டத்தட்ட இறுதிக்கட்டதை எட்டி விட்டது. இந்நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் 3 நடுவர்களுள் ஒருவராக இருக்கிறார். இவரை பற்றி யாரேனும் இன்ட்ரோ கொடுக்கும் போது “அவர் நீதி, நேர்மை, நியாயம்” என்றுதான் அழைப்பர். அப்படி, சமீபத்திய எபிசோடிலும் அவருக்கு இன்ட்ரோ கெடுக்கப்பட்டது.ரக்ஷன், “அவர் தாங்கைய்யா நீதி” என்று ரகுவரன் வேடம் போட்டிருந்த குரேஷியிடம் கூறினார். அதற்கு ரக்ஷன், “அவரா நீதி? அவர் முகத்தை பார்த்து நீதி என்று சொல்லிவிட்டு ஒரு 10 செகண்ட் சிரிக்காமல் இருங்க பார்ப்போம்..” என்றார். இதை பார்த்துவிட்டு மாதம்பட்டி ரங்கராஜ் அவரை இறங்கி வந்து அடித்தார். இது தற்போது இணையவாசிகள் மத்தியில் பேசபொருளாக மாறியிருக்கிறது. ஒரு சிலர் அந்த நகைச்சுவை கேஷுவலாக நடந்திருக்கும் என்று சொல்ல, இன்னும் சிலர் மாதம்பட்டியை குரேஷி முகத்திற்கு நேராக கலாய்த்திருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.இப்போது மற்றொரு வீடியோவில் இதே போல குரேஷி சமையல் செய்து கொண்டிருக்கும் போது மிக்சிங் தெரியுமா என்று ரங்கராஜ் அவர்கள் கேட்டாக, அதற்க்கு குரேஷி “எல்லாம் நீங்க பண்றது தான்.” என்று சிரிப்புடன் கூறியிருப்பார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. A post shared by aadhira_ad (@cwc6_cuts)
