Connect with us

சினிமா

பிரபல இயக்குநர் மாரடைப்பால் திடீர் மரணம்.! பேரதிர்ச்சியில் திரையுலகினர்

Published

on

Loading

பிரபல இயக்குநர் மாரடைப்பால் திடீர் மரணம்.! பேரதிர்ச்சியில் திரையுலகினர்

கன்னடத் திரையுலகில் பிரபல எழுத்தாளராகவும், இயக்குநராகவும் திகழும் எஸ்.எஸ் டேவிட்  மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த  ஞாயிற்றுக்கிழமை  திடீரென மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. 1998 ஆம் ஆண்டு வெளியான ஜெய் ஹிந்த்  மற்றும்  சுபாரி படங்களை இயக்கிய இவர்,  இயக்குநராக மட்டுமில்லாமல் போலீஸ் ஸ்டோரி, அக்னி ஐபிஎஸ்,  ஹாய் பெங்களூர், சுதந்திர தினம்  போன்ற பல படங்களுக்கு திரைக்கதைகளை  எழுதி எழுத்தாளராகவும் பணியாற்றினார். தனது தனித்துவமான கதை சொல்லல் மற்றும் இயக்குநருக்கான திறமையால் கன்னட சினிமாவில் சிறப்பான இடம் பெற்றவர் டேவிட்.  இவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகில்   பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேவிட் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளராக இருந்த போதும்  அவரது உடலை யாரும் உரிமை கூற முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.  அவருடைய சகோதரியின் பயணக் கடினத்தால் இறுதிச்சடங்குகளை உள்ளூரிலே நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.மேலும், உயிரிழந்த டேவிட்டின் உடல் தற்போது புறநகரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அல்லது இறுதிச் சடங்குக்கான விபரங்கள் வரும் வரை அவருடைய உடலை விடுவிக்க மாட்டோம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன