இலங்கை
பொத்துவில் கடற்பகுதியில் நீரில் மூழ்கிய சுவிஸ் பெண் – பாதுகாப்பாக மீட்பு!
பொத்துவில் கடற்பகுதியில் நீரில் மூழ்கிய சுவிஸ் பெண் – பாதுகாப்பாக மீட்பு!
பொத்துவில் கடற்பகுதியில் நீரில் மூழ்கிய சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண், உயிர்காக்கும் அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொத்துவில் எலிஃபண்ட் ராக் கடற்கரையில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் நீராடச் சென்றுள்ளார்.
இதன்போதே 17 வயதான சுவிஸ் நாட்டைச் சேர்ந்த குறித்த பெண் நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது பலத்த நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார்.
பெண் நீரில் மூழ்குவதை பொத்துவில் பொலிஸ்பிரிவின் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் அவதானித்தனர்.
அதனையடுத்து உயிர்காக்கும் அதிகாரிகளால் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். மீட்புக்குப் பிறகு அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
