இலங்கை
முதியவரின் உயிரை பறித்த பேருந்து ; சாரதி கைது
முதியவரின் உயிரை பறித்த பேருந்து ; சாரதி கைது
திஸ்ஸ-மாத்தறை பிரதான சாலையில்,மோட்டார் சைக்கிள் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த வேளை பின்னால் சென்ற பேருந்து மோதி விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் ரன்னவைச் சேர்ந்த 79 வயது மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த சாரதி முதலில் ரன்ன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தங்கல்லே மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போதும் உயிரிழந்தார்.
இதனையடுத்து பேருந்து சாரதியைக் கைது செய்த ஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
