Connect with us

இலங்கை

விவசாயிகளது உரிமை பறிக்கப்படுவது அநீதி; எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு!

Published

on

Loading

விவசாயிகளது உரிமை பறிக்கப்படுவது அநீதி; எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு!

தற்போதைய அரசாங்கம் விவசாயிகளின் வாழும் உரிமையையும், பயிர் செய்யும் உரிமையையும் பறித்துவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரவுள்ளேன். விவசாயிகள் மானியங்களையோ அல்லது நிதியுதவிகளையோ கேட்கவில்லை. பல தசாப்தங்களாக தாங்கள் பயிரிட்டு வரும் நிலத்தின் மீதான உரிமையைக் கேட்கின்றனர். சோளம், தர்ப்பூசணி மற்றும் வெண்டிக்காய் ஆகியவற்றைப் பயிரிடுகின்ற 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையான குடும்பங்கள், 25 ஆயிரம் ஏக்கரில் பல தசாப்தங்களாகப் பாரம்பரியமாகப் பயிரிட்டுவருகின்றனர். அவர்கள் தமது சேனைப்பயிர்ச் செய்கையின் நிலத்துக்கான உரிமையைக் கோரி நிற்கின்றனர். இந்த விவசாயிகள் வாழும் உரிமை, வாழ்வாதாரம் மற்றும் விவசாயம் செய்யும் உரிமை என்பன பறிக்கப்படுகின்றன – என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன