சினிமா
ஸ்ரேயா சரண் ‘மிராய்’ படத்தில் புதிய அவதாரம்…!கதாபாத்திர போஸ்டரைவெளியிட்ட படக்குழு…!
ஸ்ரேயா சரண் ‘மிராய்’ படத்தில் புதிய அவதாரம்…!கதாபாத்திர போஸ்டரைவெளியிட்ட படக்குழு…!
பாலிவுட், கொலிவுட், மற்றும் டாலிவுட் என பல்வேறு இந்திய மொழிகளில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வரும் ஸ்ரேயா சரண், தற்போது தெலுங்கில் “மிராய்” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தேஜா சஜ்ஜா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு அம்மாவாக ஸ்ரேயா சரண் வலம் வருகிறார். படம் வரும் செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.படக்குழு சமீபத்தில் ஸ்ரேயா சரணின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த போஸ்டரில் ஸ்ரேயா உணர்வுப்பூர்வமாக காட்சியளிக்க, அவரது வேடம் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.இதற்கு முன்னர், S.S. ராஜமௌலி இயக்கிய பெரும் வெற்றிப் படம் ஆர்ஆர்ஆர் (RRR) -இல், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கனின் மனைவியாகவும், ராம் சரணின் தாயாகவும் நடித்திருந்தார். அவரது திரை நேரம் குறைவாக இருந்தாலும், அந்தக் கதாபாத்திரம் கதையின் முக்கியமான திருப்பங்களை கொண்டு வந்தது.“மிராய்” படத்தில் இவரது அம்மா வேடம், கதையின் உணர்வுப் பகுதிக்கு உயிர் கொடுக்கும் வகையில் இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் ரெட்ரோ என்ற தமிழ்ப்படத்தில் நடித்திருந்த ஸ்ரேயா, தற்போது தனது வித்தியாசமான கதாபாத்திர தேர்வுகளால் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பாராட்டைப் பெற்றுவருகிறார்.
